சூரிய மின்சக்தி திட்டத்திற்கு அனுமதி பெற லஞ்சம்… நத்தம் விஸ்வநாதன் மீது திருச்சி போலீசார் வழக்கு
சூரிய மின்சக்தி திட்டத்திற்கு அனுமதி பெற்றுத்தர 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி: முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்பட 4 பேர் மீது திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருச்சி காஜாமலையைச் சேர்ந்தவர் லோகநாதன். கடந்த 2014ஆம் ஆண்டு சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க அனுமதிகேட்டு, அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அனுகியதாக கூறப்படுகிறது. திட்டத்திற்கு அனுமதி அளிப்பதற்கு ரூ50 லட்சத்தை நத்தம் விஸ்வநாதன் லஞ்சம் கேட்டதாக லோகநாதன் கூறியுள்ளார்.

இதையடுத்து ரூபாய் 50 லட்சத்தை விஸ்வாதனிடன் கொடுத்ததாகவும், ஆனால் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கான அனுமதியை பெற்றுத் தராமல், அவர் மோசடி செய்ததாக லோகநாதன் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, மோசடி தொடர்பாக நத்தம் விஸ்நாதன், பாஸ்கர், அருண்குமார், காமராஜ் ஆகிய 4 பேர் மீது, கூட்டுச்சதி, மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த திருச்சி கே.கே.நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications