வீடு புகுந்து பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர்.. நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்த திருச்சி பெண்!
திருச்சி: திருச்சியில், நள்ளிரவில் தனது வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் ஒரு இன்ஸ்பெக்டர் என்று கூறி பரபரப்பைக் கிளப்பிய பெண், இன்று திருச்சியில் பெண் நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பரிமளா. (35). சில மாதங்களுக்கு முன்பு இவர் திருச்சியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய முருகேசன் (50) என்பவர் மீது புகார் கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து முருகேசன் நெல்லை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி நள்ளிரவு வீட்டில் தான் தனியாக இருந்தபோது முருகேசன் வீடு புகுந்து வந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக போலீஸில் புகார் கொடுத்தார் பரிமளா.
இது குறித்து கண்டோன்மெண்ட் மகளிர் போலீசார் இன்ஸ்பெக்டர் முருகேசன் மீது 2 பிரிவுகள் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்ஜாமீன் பெற்றார். அவர் தினமும் கண்டோன்மெண்ட் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே இன்ஸ்பெக்டர் முருகேசனை அவர் ஜாமீன் பெறும் வரை கைது செய்யாமல் போலீசார் காப்பாற்றுவதாகவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிமளா குற்றம் சாட்டினார். மேலும் நேற்று திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதத்திலும் குதித்தார். அவரை பெண் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை திருச்சி 3வது பெருநகர கோர்ட்டில் நீதிபதி அல்லி முன்பு ஆஜரானார் பரிமளா. அவரிடம் 2 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். நீதிமன்றக் கதவு பூட்டப்பட்டு இந்த வாக்குமூலம் பெறப்பட்டது. வீடியோவிலும் அது பதிவு செய்யப்பட்டது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications