கோவையில் வழக்கறிஞர் வீட்டில் ஆட்டைய போட முயன்ற கொள்ளையர்.. சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை!
வழக்கறிஞர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Recommended Video

கோவை: கோவை அடுத்த சோமனூரில் பெண் வழக்கறிஞர் வீட்டில் இளைஞர்கள் இருவர் திருட முயற்சிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியதை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோமனூர் ரயில்வே பாலத்தின் அருகில் வசித்து வரும் மில் உரிமையாளரான பழனிச்சாமி, அவரது மனைவி, வழக்கறிஞராக பணியாற்றி வரும் மகள் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, நள்ளிரவு, ஜன்னல் வழியாக வீட்டினுள் உள்ளவற்றை நோட்டமிட்ட மர்மநபர்கள், பின்னர் கதவை உடைக்க முயற்சித்தனர். இதனால் வெளியில் உறங்கிக்கொண்டு இருந்த பழனிசாமி கதவை உடைக்கும் சப்தம் கேட்டு எழுந்துள்ளார்.

அப்போது கதவை உடைக்க முடியாமல் சுவர்மேல் ஏறி பந்தலை பிரித்து அதன் வழியாக இறங்க முயற்சித்த மர்மநபர்களை கண்டு கூச்சலிட்டார்.
இதையடுத்து, திருட வந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இவை அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த கொள்ளை முயற்சி குறித்து உடனே கருமத்தப்பட்டி காவல்துறைக்கு பழனிசாமி தகவல் அளித்தார்.
இதையடுத்து, ரோந்து காவலர் வந்து விசாரனை நடத்தி சென்றுள்ளனர். இதுவரை திருட்டு முயற்சி நடந்த வீட்டிலிருந்து யாரும் புகார் கொடுக்காததால் வழக்குப்பதிவு செய்யவில்லை. இருப்பினும், புறநகர்ப் பகுதியில் நடந்த சம்பவம் என்பதால் சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications