எல்லாம் கைமீறிபோச்சே.. பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்து தினகரன் ஆலோசனை
Recommended Video

பெங்களூர்: பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை, டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இரட்டை இலை சின்னத்தை பெறும் முயற்சியில் டிடிவி தினகரன் தோல்வியடைந்துள்ளார். இதையடுத்து அவர் தரப்பை சேர்ந்த 5 எம்.பிக்கள் முதல்வர் எடப்பாடி அணிக்கு அணி மாறியுள்ளனர்.
இந்த நிலையில், தினகரன் அணியில் இணைந்ததால், தகுதி நீக்கத்திற்கு உள்ளான எம்.எல்.ஏக்கள் 18 பேரும் படிப்படியாக எடப்பாடி அணிக்கு தாவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நெருக்கடி
இதனிடையே ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தினகரன் போட்டியிட்டு அதிமுகவுக்கு் நெருக்கடி கொடுத்தால் பாஜக அவருக்கு நெருக்கடி தரும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏகப்பட்ட வழக்குகளில் சம்மந்தப்பட்ட தினகரனை அடுத்து சிறை அனுப்ப மத்திய அரசு முயற்சி செய்ய தயங்காது என்பது அவருக்கு கிடைத்துள்ள சேதி.

பெங்களூர் விரைந்தார்
இதையடுத்து, சசிகலாவை சந்தித்து அவர் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய தினகரன் அவசரமாக பெங்களூர் புறப்பட்டு சென்றார். மீண்டும் தொப்பி சின்னத்தில் போட்டியிடுவது குறித்து அவர் ஆலோசிக்க வாய்ப்புள்ளது. மேலும் அதிமுக அரசுக்கு எதிராக எப்படி வியூகம் அமைப்பது என்பது குறித்தும் சசிகலாவுடன், தினகரன் கலந்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது. இந்த சந்திப்பின்போது டாக்டர் வெங்கடேஷும் உடனிருந்தார்.

போட்டியிடவே வாய்ப்பு
ஆலோசனையை தொடர்ந்து இன்று மாலை தினகரன் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. சென்னை திரும்பியதும் தேர்தலில் போட்டியிடுவதை அதிகாரப்பூர்வமாக அவர் வெளியிடக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எளிதில் விடமாட்டார்கள்
சசிகலா, தினகரனை தேர்தலில் போட்டியிட கூடாது என கூறும் நபர் இல்லை. எனவே சரியான வியூகத்தை மட்டும் சசிகலாவிடம் கேட்டுக்கொண்டு தினகரன், நாளை மறுநாள் வேட்புமனுவை தாக்கல் செய்யவும் தினகரன் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications