அன்று 2 பேர்... இன்று 2000 பேர் - தினகரனை வரவேற்க கூட்டி வரப்பட்ட கூட்டம்
திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த டிடிவி தினகரனை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிக்கப்பட்டனர்.
சென்னை: டெல்லி திஹார் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று சென்னை வந்த டிடிவி தினகரனை இன்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சியின் பெயரை மீண்டும் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி வரை லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், அவரது நெருங்கிய நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் கடந்த ஏப்ரல் 26ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

2 பேர் சந்திப்பு
27ஆம் தேதி விசாரணைக்காக தினகரன் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட போது விமான நிலையத்திற்கு அதிமுகவில் பெயர் சொல்லக்கூடிய அளவிற்கு இரண்டு பேர் மட்டுமே வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநில பேச்சாளருமான நாஞ்சில் சம்பத். மற்றொருவர் கர்நாடாக மாநில அதிமுக செயலாளரான புகழேந்தி .

தினகரனுக்கு ஜாமீன்
இந்த வழக்கில் தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பூனம் சவுத்ரி, இருவருக்கும் தலா 2 பேர் ரூ.5 லட்சத்துக்கான உத்தரவாதத்தினை வழங்கி, ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று நிபந்தனை விதித்தார்.

திஹாரில் இருந்து விடுதலை
நேற்று இரவு 9.30 மணிக்கு டிடிவி தினகரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை எம்பிக்கள் வேணுகோபால், செஞ்சி ஏழுமலை, எம்எல்ஏ வெற்றிவேல் மற்றும் கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி வரவேற்றனர். நேற்றிரவு டெல்லி விமானநிலையம் அருகில் உள்ள ஓட்டலில் தங்கினார்.

சென்னை வருகை
இன்று காலை விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்த தினகரனை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். டிடிவி தினகரன் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். அப்போது அதிமுக அம்மா அணியினர் வாழ்க முழக்கமிட்டனர்.

அடையாறில் கூட்டம்
தினகரன் வீட்டின் அருகே நீண்ட நாட்களுக்குப் பின்னர் தொண்டர்கள் குவிந்திருந்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவரும் தினகரனை வரவேற்றும் நீதிபதிக்கு நன்றி கூறியும் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.

குவிக்கப்பட்ட கூட்டம்
டிடிவி தினகரனை விசாரணைக்கு அழைத்து வந்த போது அன்று 2 பேர் மட்டுமே விமான நிலையம் வந்தனர். இன்று 2000 பேர்வரை குவிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ பயணிகள்தான்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications