5ம் தேதி கிளம்பி வாங்க.. அதிமுக நிர்வாகிகளுக்கு தினகரன் திடீர் அழைப்பு!
ஆகஸ்ட் 5ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை: ஆகஸ்ட் 5ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்த அவர், பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சசிகலாவின் ஆலோசனைப்படி இரு அணிகளும் இணைய 60 நாட்கள் அவகாசம் கொடுப்பதாக கூறினார். மேலும் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு பிறகு தீவிர அரசியலில் ஈடுபடபோவதாகவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

அணிகள் இணையவில்லை
ஆனால் இரு அணிகளும் இணைவது குறித்து இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழுக்களும் கலைக்கப்பட்டன.

டிடிவி தினகரன் அழைப்பு
இந்நிலையில் வரும் 5ஆம் தேதி அதிமுக தலைமை கழகத்திற்கு வருமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளதுள்ளதாக எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் அறிவித்தனர்.

தலைமை கழகத்திற்கு..
இதற்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கட்சி அலுவலகத்தை கைப்பற்றும் வகையில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அதிமுக
தலைமை கழகத்துக்கு வருமாறு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

அழைப்பால் பரபரப்பு
மாவட்ட நிர்வாகிகளுக்கு கடிதம் மூலம் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். அதிமுகவுக்கு 3 அணிகளும் உரிமை கோரி வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகிகளை டிடிவி தினகரன் தலைமை கழகத்துக்கு அழைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications