மூத்த அமைச்சரின் இழிவான பேச்சு.. பெண்களை அவமதிக்கும் ஆட்சியாளர்கள் நீடிக்கமுடியாது.. தினகரன் ஆவேசம்!
சென்னை : திமுக மூத்த அமைச்சர்கள் தாய்மார்களையும், மாணவிகளையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கது, பெண்களை அவமதிக்கும் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், கல்லூரி மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டம் பற்றிப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "உங்கள் பெண் கல்லூரியில் சேர்ந்தால் அவருக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். பஸ்ஸுக்கு அம்மாவிடம் போய் கேட்காதே. நீ பசங்களோட சினிமாவுக்கு போனா அங்க பணம் கேட்காதே. ஒரு செல்போன் வாங்கி வச்சுக்கோ. அதுல நைசாக பேசு.. என்ன வேணும்னாலும் பண்ணு என்று ஆயிரம் கொடுக்கிறோம்" என்று பேசியுள்ளார்.
மூத்த அமைச்சர் துரைமுருகன், அரசின் உதவித்தொகை திட்டம் பற்றிப் பேசும்போது பெண்களை இழிவுபடுத்துவது போல் பேசியதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. முன்னதாக, இலவச பேருந்து பயணம் பற்றி அமைச்சர் பொன்முடி பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "திமுக மூத்த அமைச்சர்கள் தாய்மார்களையும், மாணவிகளையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கது. 1000 ரூபாய் உதவி பெறும் மாணவிகள், தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுநிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு பல்வேறு பிரிவினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்யும் அரசு அவர்களையே இழிவுபடுத்துவது எந்தவகையில் நியாயம்?

இலவசங்கள் தர வேண்டும் என்று பொதுமக்கள் யாரும் இவர்களிடம் கேட்கவில்லை. ஆட்சியைப் பிடிப்பதற்கு தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைத்தான் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர். பெண்களை இழிவுபடுத்தும் சமூகம் மட்டுமல்ல, பெண்களை அவமதிக்கும் ஆட்சியாளர்களும் நீடித்திருந்ததாக சரித்திரம் இல்லை. பெண்களை அவமதிக்கும் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை!" எனத் தெரிவித்துள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications