‘ஆச்சி‘ சர்ச்சைப் பேச்சு:அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு தினகரன் கண்டனம்.. மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
அமைச்சர் செல்லூர் ராஜூவின் ஆச்சி குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அமைச்சர் செல்லூர் ராஜூவின் ஆச்சி குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரஜினியை கிண்டலடிப்பதாக நினைத்து அமைச்சர் செல்லூர் ராஜூ காரைக்குடி ஆச்சி குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
செல்லூர் ராஜூவுக்கு எதிராக காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினகரன் கண்டனம்
இதனிடையே அமைச்சர் செல்லூர் ராஜூ தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டிடிவி தினகரன், அமைச்சர் செல்லூர் ராஜூவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
|
அளப்பெரிய தொண்டு
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
உலகம் போற்றும் தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் தனித்த முத்திரையும், தனிச்சிறப்பும் கொண்டு, அருந்தமிழ் மொழிக்கு அளப்பெரிய தொண்டாற்றிய பகுதி செட்டிநாடும், அங்கு வாழும் நகரத்தார் மக்களும்.
|
கண்டனத்திற்குரியது
எதற்கும் பிரயோஜனம் இல்லாத ஒரு அரசியல் தொடர்பான கேள்விக்கு மிகப்பெரிய நகைச்சுவையாக பதில் சொல்வதாக கருதி, இறைப்பணியையும், தூய தமிழ் பணியையும் செவ்வனேசெய்து அமைதியான வாழ்க்கை முறையை பின்பற்றும் பாசமிக்க நகரத்தாரைதொடர்புப்படுத்தி செல்லூர் ராஜு தெரிவித்தகருத்து கண்டனத்திற்குரியது
|
பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்
அமைச்சர் பதவியில் உள்ளவர் பொறுப்பற்ற முறையில் இதைப்போன்ற கருத்துக்களை கூறி, குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளை காயப்படுத்த முற்படும் செயல்களை இத்துடன் நிறுத்திக்கொண்டு, தன் கருத்துக்கு வருத்தம் என்று சொல்லி சமாளிக்கும் வேலையை விட்டுவிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும். இவ்வாறு டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications