அன்பு மகள் அனிதா தற்கொலை செய்தது வேதனையளிக்கிறது.. டிடிவி தினகரன் இரங்கல்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இறந்து போன நீட் போராளி அனிதா-வீடியோ
சென்னை: அன்பு மகள் அனிதா தற்கொலை செய்துகொண்ட செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் அவர் கூறுகையில், நீட் தேர்வை எதிர்த்து போராடியஅன்பு மகள் அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளாரே என்று அனிதாவின் துணிச்சலை எண்ணி மகிழ்ந்திருந்தேன்.

அவர் இத்தகைய முடிவை எடுப்பார் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அனிதாவின் மரணம் பெரும் இழப்பு. மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications