For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பழையபடியும் அதே கூத்து.. ஆர்.கே.நகரில் குவிக்கப்படுகிறதா குக்கர்கள்? வெளியான பரபரப்பு போட்டோக்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பழையபடியும் அதே கூத்து..ஆர்.கே.நகரில் குவிக்கப்படுகிறதா குக்கர்கள்?வெளியான பரபரப்பு போட்டோக்கள்

    சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கியுள்ள தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதை பிரபலப்படுத்த தினகரன் அணியினர் தாறுமாறு வேலைகளில் இறங்கியுள்ளனர்.

    ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு தினகரன் அணியினர் குக்கரை லஞ்சமாக கொடுப்பதாக அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    குக்கரை பரிசளிப்பதன் மூலம், வாக்குக்கு பணம் கொடுக்காமல் பொருளாக கொடுத்தது போலவும் ஆகிறது, மற்றும் சின்னத்தை பிரபலப்படுத்துவதை போலவும் ஆகிறது.

     ரகசிய போட்டோக்கள்

    ரகசிய போட்டோக்கள்

    இவ்வாறு குக்கர்கள் பரிசளிக்கப்படுவதை அதிமுக ஐடி விங் ரகசியமாக போட்டோக்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகினர். தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா என்றும் அதிமுக சார்பில் கேள்வி முன் வைக்கப்படுகிறது. அதிமுக ஐடி விங் வெளியிட்ட செய்த இரு டிவிட்டுகளை பாருங்கள்.

    வண்டி வண்டியாக குக்கர்

    ஆர்கேநகர் 247 பூத் பாரதி நகர் வார்டு பொறுப்பாளர்கள் வண்டி வண்டியாக குக்கர் இறக்கினர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா? என்று கேட்கப்பட்டுள்ளது.

    குக்கர் வழங்கியபோது..

    "கொருக்குப்பேட்டை 247 பூத் தினகரன் அணி மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன், அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி தம்பி தினகரனுக்கு, ஆதரவு கேட்டு பொதுமக்களுக்கு குக்கர் வழங்கிய பொழுது" என்று கூறி இந்த போட்டோ வெளியிடப்பட்டுள்ளது.

     திமுக, பாஜக குற்றச்சாட்டு

    திமுக, பாஜக குற்றச்சாட்டு

    ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடப்பதாக திமுக சார்பில் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதேபோல பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாலை மறியல் நடத்தினார். இப்போது அதிமுக இப்படி போட்டோக்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தினகரன் தரப்பினர் கருத்தை கேட்க முயன்றபோது, அவர்கள் தரப்பு பதில் கிடைக்கவில்லை.

    English summary
    TTV Dinakaran faction members distributing cookers in RK Nagar by poll, allegation made by AIADMK and the have released some set of photos to prove their claim.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X