பதவியேற்று ஒரு வருஷம் கூட முழுசா முடியல இந்த தினகரன் செய்த காரியத்தை பாருங்க... சபாஷ்!
Recommended Video

சென்னை: டிடிவி தினகரன் தனது கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி புத்தகமும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் தொகுப்பும் வழங்கப்படவுள்ளது.
டிடிவி தினகரன் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்து வருகிறார். அவர் அதிமுகவை கைப்பற்ற நினைத்து இறுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
மக்கள் விரோத பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் முதலில் குரல் கொடுப்பவர் தினகரனே. நீட் தேர்வால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட போது அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு அவரது தந்தைக்கு நிதியுதவியையும் அளித்துள்ளார்.

தேர்ச்சி பெற ஏதுவாக
தினகரன் பொதுமக்களின் நலன் கருதி அனைத்து காரியங்களையும் செய்து வருகிறார்.குறிப்பாக 10 -ஆம் வகுப்பு மாணவர்கள் நன்கு படித்து 11-ஆம் வகுப்புக்கு அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற ஏதுவாக வினாத்தாள் தொகுப்பை வழங்கவுள்ளார்.

பயிற்சி புத்தகம்
அதேபோல் நீட் தேர்வில் தோல்வி அடைந்து எந்த மாணவர்களுக்கும் மருத்துவ சேர்க்கை கிடைக்காமல் அவர்கள் மனமுடைந்து தவறான முடிவுகள் எடுப்பதை தடுக்க நீட் தேர்வுக்கான பயிற்சி புத்தகத்தையும் வழங்கவுள்ளார்.

இரு மொழிகளிலும்
இந்த இரு புத்தகங்களும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயார் செய்யப்பட்டுள்ளது. இது வெகு விரைவில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. எல்லா மாணவர்களுக்குமா இல்லை அவர் தொகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமா என தெரியவில்லை. எதுவாகினும் யாராவது மாணவர்கள் படித்து பயன்பெறத்தான் போகிறார்கள்.
|
தினகரனின் செயல்
இதை இன்னும் சிபிஎஸ்இ-யிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள், கல்வி நிபுணர்களை கொண்டு இனி வருங்காலங்களில் டிடிவி தினகரன் தயார் செய்யலாம். உடனே அவர் இடைத்தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு செய்கிறார் என விமர்சனங்கள் எழலாம். எதுவாக இருந்தால் என்ன நாங்கள் வெற்றி பெற்றால் அதை செய்வோம், இதை செய்வோம் வெறும் கையில் முழம் போடுவதை விட தினகரனின் செயல் பாராட்டுதலுக்குரியதே ஆகும். சபாஷ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications