குண்டூசியால் கண்ணை குத்தலாமே- ஓபிஎஸ்ஸுக்கு தினகரன் பதிலடி!
சென்னை: குண்டூசியால் மலையை குத்த தேவையில்லை, ஆனால் கண்ணை குத்தலாம் என்று டிடிவி தினகரன் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், ஸ்டாலினை முதல்வராக்கும் வரை தூங்கமாட்டேன் என்ற வைகோவுக்கு இனி தூக்கமே வராது. குண்டூசியை வைத்துக் கொண்டு குன்றத்தூர் மலையை ஓட்டை போடுவேன் என டிடிவி துடிக்கிறார் என்றார் ஓ.பன்னீர் செல்வம்.

இதற்கு டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் குண்டூசியால் மலையை குத்த தேவையில்லை. ஆனால் கண்ணை குத்தலாம்.
கருணாஸ் அரசியல் ரீதியான ஆதரவாளரே தவிர ஜாதிய ரீதியான ஆதரவாளர் இல்லை. திமுக நடத்தும் கூட்டத்துக்கு கூட கருணாஸ் செல்கிறார், அவர் ஒரு சுதந்திரமான மனிதர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி என்பது சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட இயக்கமாகும் என்றார் டிடிவி தினகரன்.












Click it and Unblock the Notifications