பரோலில் வரும் சசிகலா எங்கு தங்குவார்?... தினகரனுடன் சிறை துறையினர் ஆலோசனை?
பரோலில் வெளியே வரும் சசிகலாவை அழைத்து வருவதற்காக தினகரன் பெங்களூர் புறப்பட்டு சென்றார்.
சென்னை: பரோலில் வெளியே வரும் சசிகலாவை அழைத்து வருவதற்காக பெங்களூர் செல்லும் தினகரனிடம் சசிகலா எங்கே தங்குவார் என்ற விவரங்களை காவல் துறையினர் ஆலோசனை நடத்துவர் என தெரிகிறது.
சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அண்மையில் உறுப்பு மாற்று சிகிச்சை நடைபெற்றது.

கணவரை காண சசிகலா பரோலில் வர விண்ணப்பத்திருந்தார். அதில் தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளதாக சிறை துறை நிர்வாகம் தெரிவித்துவிட்டது. இதை தொடர்ந்து சசிகலா மீண்டும் பரோலுக்கு விண்ணப்பித்தார்.
இதனிடையே சசிகலா பரோலில் வர எந்த வித ஆட்சேபமும் இல்லை என சென்னை காவல் துறை தடையில்லா சான்றிதழ் வழங்கினால் மட்டுமே அவரது பரோல் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைத் துறை கண்காணிப்பாளர் சோமசுந்தர் தெரிவித்திருந்தார்.
சசிகலா பரோலில் வருவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சென்னை காவல் துறையினர் சரிபார்த்து வருவதாக தகவல்கள் கூறப்பட்டன. இந்நிலையில் தினகரன் சென்னையிலிருந்து திடீரென பெங்களூர் புறப்பட்டு சென்றார்.
இதனால் சசிகலாவுக்கு இன்று அல்லது நாளை பரோல் கிடைக்கலாம் என தெரிகிறது. மேலும் சசிகலா சென்னை வந்தால் அவர் எங்கு தங்குவார் என்பது குறித்தும் சிறை துறையினர் தினகரனிடம் ஆலோசனை நடத்துவர் என தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications