ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் துரோகிதான் தினகரன்.. சரமாரியாக விளாசிய எடப்பாடியார்!
ஆட்சியை பிடிக்க நினைக்கும் துரோகி டிடிவி தினகரன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சரமாரியாக விளாசியுள்ளார்.
மதுரை: ஆட்சியை பிடிக்க நினைக்கும் துரோகி டிடிவி தினகரன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சரமாரியாக விளாசியுள்ளார்.
மதுரை பாண்டிகோவிலில் அதிமுக அரசின் சாதனை சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, 'நாடாளுமன்ற தேர்தலுக்கான வெற்றிபிரச்சாரத்தினை தொடங்கிவிட்டோம். அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மக்களின் முழு ஒத்துழைப்போடு தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.

யார் இந்த தினகரன்?
கட்சி வலிமைபெற ஒற்றுமை அவசியம். தினகரன், அதிமுகவுக்காக உழைத்தவரா? அவருக்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்? அவர் கட்சிக்காக என்ன பணியாற்றினார். யார் இந்த தினகரன் ? எத்தனை முறை சிறை சென்றார் ? நான் 4 முறை சிறை சென்றுள்ளேன்.

தினகரன் ஒரு துரோகி
டிடிவி தினகரன் திமுகவுடன் சேர்ந்து கொண்டு அதிமுகவை அழிக்க நினைக்கிறார். ஆட்சியை பிடிக்க நினைக்கும் துரோகிதான் தினகரன். ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் கனவுகளை தூள் தூளாக்கி விட்டோம்.

ஒற்றுமையாக நிற்கிறோம்
கொல்லைபுறமாக சிலபேர் ஆட்சியை பிடிக்க முயல்கிறார்கள். கட்சியை உடைக்க நினைத்தவர்களின் சூழ்ச்சியை முறியடித்து ஒற்றுமையாக நிற்கிறோம்.

டிவிக்கள் மீது வருத்தம்
எத்தனையோ பெரிய தலைவர்கள் வாழ்ந்த இந்த நாட்டில் மீடியாக்கள் யார் என்று தெரியாமல் இருக்கும் நபர்களை பெரிதுபடுத்தி வருகின்றனர். டிவிக்கள் இவ்வாறு நடந்து கொள்வது வருத்தமாக இருக்கிறது.

தினகரன் துடிக்கிறார்
பெரிய தலைவர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் , இப்படிப்பட்டவரும் வாழ்ந்து கொண்டிருக்க்கிறார். இவரையும் டிவியில் காட்டி வருகிறீர்கள். இந்த ஆட்சியை கலைக்க தினகரன் துடிக்கிறார்.

மக்கள் மன்னிக்க மாட்டார்கள்
தீய சக்தியோடு சேர்ந்து செயல்படுகிறார்.தினகரன் துரோகி ஆவார். அதிமுகவை அழிக்க நினைத்தால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

கேட்காமலேயே கிடைக்கிறது
காவிரி பிரச்னைக்கு நல்ல தீர்வை அதிமுக அரசு பெற்றுத் தந்திருக்கிறது. அப்போது கேட்டும் கிடைக்காத காவிரி நீர், தற்போது கேட்காமலேயே வந்துகொண்டிருக்கிறது' எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications