நாளைக்கு 12 மணிக்கு வர்றீங்க, 10 பேர் மட்டும்தான் கூட வரணும்.. தினகரனுக்கு ஆளுநர் அனுமதி!
டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள், எம்பிக்களுடன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை நண்பகல் 12 மணிக்கு சந்திக்கிறார்.
சென்னை: ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை பகல் 12 மணிக்கு சந்திக்கிறார் டிடிவி தினகரன். டிடிவி தினகரனுடன் 10 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக இரு அணிகள் இணைந்த பிறகு அதிமுக அம்மா கட்சி பொதுச் செயலாளர் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு 19 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதல்வர் கே.பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும் அதனால் அவருக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் கூறி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தனித்தனியாக மனு கொடுத்தனர்.
இதையடுத்து, அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் மனு கொடுத்தன. இப்போது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர், இரண்டு நாட்களில் ஆளுநர் முடிவு எடுக்காவிட்டால் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம் என்று தெரிவித்தனர்.
சென்னையில் நேற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 111 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டதாகவும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 9 பேர், கூட்டணி எம்எல்ஏக்கள் மூவர் உட்பட 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
ஆனால் இதை தினகரன் அணி திட்டவட்டமாக மறுத்திருந்தது. ஆதரவு கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிட தயாரா என்றும் தங்க தமிழ் செல்வன் சவால் விட்டார். இந்த நிலையில் நாளை ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரன் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சந்திக்க உள்ளார்.
செப்டம்பர் 7ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு 10 பேருடன் ஆளுரை சந்திக்கப் போகிறார் தினகரன். ஆளுநரை சந்தித்து தினகரன், சட்டசபையை கூட்டவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் வலியுறுத்துவார் என்று தெரிகிறது. இது எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications