டிடிவி தினகரன் அமைப்பின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
டிடிவி தினகரன் தனது புதிய அமைப்பிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரை சூட்டியுள்ளார்.
Recommended Video

மதுரை: மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் தனது புதிய அமைப்பிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரை சூட்டியுள்ளார்.
ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் மதுரை மேலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயா் மற்றும் அமைப்பின் கொடியை இன்று அறிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்று பெயரை அறிவித்த டிடிவி தினகரன் அமைப்பின் கொடியையும் அறிமுகம் செய்தார். கறுப்பு வெள்ளை சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றுள்ளது.

தினகரன் பிரம்மாண்டம்
மேலூரில் லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரத்திற்கு இடையே மேடையேறினார் டிடிவி தினகரன். பலரும் மேடையில் வந்து கை குலுக்கி அறிமுகம் செய்து கொண்டனர். செந்தில் பாலாஜி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

வறுத்தெடுத்த ஆதரவாளர்கள்
தினகரன் பேசத் தொடங்கும் முன்பாக பேசிய ஆதரவாளர்கள் அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஒ. பன்னீர் செல்வத்தை கடுமையாக திட்டினர். துரோகிகள் கூட்டத்தை ஒழிக்கவே சிங்கத்தலைவன் வந்துள்ளான் என்று பேசினார். டிடிவி தினகரன் வாழ்த்தும் வகையில் பாடல்களையும் ஒலிபரப்பினார்கள்.

நல்ல நேரம் பார்த்த டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் பேசத் தொடங்கிய போது புதன் ஓரை தொடங்கியிருந்தது. கடந்த சில மாதங்களாக அமைப்பின் பெயர், கொடி எதுவும் இல்லாமல் செயல்பட்டோம். இன்று முதல் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பின் கீழ் செயல்படுவோம் என்று அறிவித்தார். சசிகலாவின் ஆசியுடன், வாழ்த்துக்களுடன் பெயரை அறிவிப்பதாக கூறினார் தினகரன்.

சட்டசபை தேர்தல்
கூட்டுறவு தேர்தல், உள்ளாட்சித்தேர்தல், சட்டசபைத் தேர்தல், லோக்சபா தேர்தல் என எந்த தேர்தலாக இருந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற பெயரின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று கூறினார். அமைப்பின் சின்னம் கொடி தேர்வு செய்யப்பட்ட விதத்தையும் கூறி மேடையில் கொடியை வடிவமைத்த வட்டச்செயலாளருக்கு பாராட்டு தெரிவித்தார் டிடிவி தினகரன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications