ஆர்கே நகரில் தேர்தல் பணிமனையை உற்சாகமாக திறந்த டிடிவி தினகரன்
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சசி அணியின் வேட்பாளர் டிடிவி தினகரன் இன்று தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.
சென்னை: ஆர். கே. நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன் இன்று 152 பேர் அடங்கிய தேர்தல் பணி பொறுப்புக்குழுவை அறிவித்த கையோடு பணிமனையையும் உற்சாகமாக திறந் வைத்து உள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டு அணிகளாக பிரிந்து உள்ளன. ஜெயலலிதா மறைவினால் காலியாக உள்ள ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் அணியின் சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். இரு அணிகளுமே தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் தங்களுக்கு மட்டுமே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளன.
இடைத்தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சியினர் அனைவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து விட்டனர். அதிமுகவின் இரு அணிகளும் இன்னமும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை.
இதனிடையே அதிமுகவின் வெற்றிச்சின்னமான இரட்டை இலை யாருக்கு என்பதே இன்னும் முடிவாகவில்லை. ஆனால் சசிகலா அணியினர் படு உற்சாகமாக உள்ளனர். 152 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை அறிவித்த டிடிவி தினகரன், இன்று தேர்தல் பணிமனையை திறந்து வைத்துள்ளார்.
தேர்தல் பணிமனையை திறக்கும் முன்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதையை செலுத்தினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன்,தங்கமணி ஆகியோரும் மரியாதையை செலுத்தினர். மேலும் அமைச்சர்கள் பெஞ்சமின், சரோஜா, நிலோபர் கபில் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். இதனையடுத்து தேர்தல் பணிமனையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் புடைசூழ தேர்தல் பணிமனையை உற்சாகமாக திறந்து வைத்துள்ளார் டிடிவி தினகரன்.
இரட்டை இலை சின்னத்துடன் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக கூறியுள்ள டிடிவி தினகரன், வேட்புமனு தாக்கல் முடிந்த உடன் பிரச்சாரத்தை தொடங்கப் போவதாக கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications