சசிகலாவின் அறிவுரையின் படி அமமுகவை காப்பாற்ற தினகரன் புதிய யுக்தி.. ஆதரவாளர்கள் உற்சாகம்
சென்னை: சசிகலாவின் அறிவுரையின்படி அதிருப்தியாளர்கள் வெளியறுவதை தடுக்க அவர்களுக்கு கட்சியில் புதிய பதவி வழங்கும் திட்டத்தினை டிடிவி தினகரன் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமமுகவை காப்பற்றுவதற்கான தினகரனின் இந்த புதிய யுக்தியால் நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
லோக்சபா தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் டிடிவி தினகரனின் அமமுக படுதோல்வி அடைந்தது. இதனால் அந்த கட்சியைவிட்டு அதன் மூத்த நிர்வாகிகள் விலகி, திமுக மற்றும் அதிமுகவில் சேர்ந்து வருகின்றனர்.
செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து தங்கத்தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார். இதேபோல் அமமுவின் அமைப்பு செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்னசபாபதி, பிரபு உள்ளிட்டோரும் அதிமுகவுக்கு திரும்பி விட்டனர். இதேபோல் அமமுகவின் பல்வேறு நிர்வாகிகள் கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

தினகரன் அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சி அடைந்த தினகரன் கட்சியில் இருந்து அதிருப்தி நிர்வாகிகள் வெளியேறுவதை தடுக்க அவர்களுக்கு புதிய பதவி கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நிதானமாக செயல்படுங்கள்
கடந்த 3ம் தேதி பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி.தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகுவது குறித்து விவாதித்தாக தெரிகிறது. அப்போது சசிகரலா, கொஞ்சம் நிதானமாக செயல்படுங்கள். இனி கட்சியை விட்டு யாரும் செல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள் என அறிவுரை கூறியதாகவும் கூறப்படுகிறது.

தினகரன் திட்டம்
சசிகலாவின் அறிவுரையை ஏற்று கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை மாற்று கட்சிக்கு செல்லவிடாமல் தடுப்பதற்கு அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்க டிடிவி.தினகரன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பழனியப்பனுக்கு பதவி
இதன் காரணமாகவே முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு துணைப்பொதுசெயலாளர் பதவியும், சி.ஆர்.சரஸ்வதிக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவியும் தினகரன் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே கட்சியில் முக்கிய நபர்கள் மேலும் 3 பேருக்கு கட்சியின் துணைப்பொதுசெயலாளர் பதவியை வழங்கவும் தினகரன் திட்டமிட்டுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications