வானிலை மையமும் அரசியல் செய்யுதா.. தினகரன் பொளேர் கேள்வி!
வானிலை ஆய்வு மையம் அரசியல் செய்வதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி: கடைசியில் வானிலை மையமும், அரசியல் செய்கிறதா என்று அமமுக, துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுள்ளார்.
கரூரில் செந்தில்பாலாஜி நடத்திவரும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் தினகரன் திருச்சி வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது கூறியதாவது:

நம்பவே முடியவில்லை
"தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் ஒரு அமைப்பு என நினைத்துக்கொண்டிருந்தோம். அது ஒரு மத்திய அரசு நிறுவனம். இப்போது அதையும் நம்பமுடியவில்லை. மழையை காரணம் கூறி இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

திடீர் ரெட் அலர்ட்
ஆனால் வானிலை மையம் கூறியதுபோல் மழை பெய்யவில்லை. அதற்குள்ளாக மழையை காரணம் காட்டி தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. வானிலை மையமும், அரசியல் செய்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. திடீர் என்று ரெட் அலர்ட் விட்டார்கள்.

நம்பிக்கை குறைகிறது
நேற்று சென்னையில் மழையே இல்லை. அதே போல் இடைதேர்தல் வேண்டும் என கூறும் திமுக தேவையில்லாத வழக்குகளை போட்டிருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையில்லாமல் போகிறது.

பாஜகவுடன் கூட்டணியா?
பாஜகவுடன் நாங்கள் ஒருபோதும் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. அது தற்கொலைக்கு சமமானது. சசிகலா பரோலில் வரவுள்ளதாக கூறப்படும் தகவல்கள் உண்மை அல்ல. இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications