ஆர்கே நகரில் பாஜகவால் 500 ஓட்டு கூட வாங்க முடியாது! - டிடிவி தினகரன்
சென்னை: ஆர்கே நகரில் நான் வெற்றி பெறுவேன் என உறுதியாகத் தெரிந்ததால்தான் தேர்தலை ரத்து செய்துள்ளனர் என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.
ஆர்கே நகர் இடைத் தேர்தல் ரத்து அறிவிப்புக்குப் பிறகு அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை. ஆர் கே நகர் தொகுதியில் 70 சதவீதத்துக்கு மேலான பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டேன்.

நான் வெற்றி பெறுவேன் என்பது உறுதியாகத் தெரிந்ததால் தேர்தலை நிறுத்த பலர் முயற்சி மேற்கொண்டனர். அதிகாரம் இருப்பதால் ஆணையம் தேர்தலை நிறுத்தி உள்ளது. பல்வேறு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றியது. யாரும் குறுக்கே நிற்கவில்லை. இத்தனைக்குப் பிறகும் தேர்தலை நிறுத்தியுள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க ஆணையத்திடம் மீண்டும் கோருவோம்.
தேர்தல் நேரத்தில் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்த அவசியம் என்ன? விஜயபாஸ்கர் வீட்டில் பணம் கைப்பற்றியதாகக் கூறுவதில் உண்மையில்லை.
ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார். அதிமுகவை அழிக்க இன்னும் சிலர் சதி செய்கின்றனர்.
இங்கே அமைதியான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தோம். எனது வெற்றி தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது. இங்கே எப்போது தேர்தல் வைத்தாலும் என் வெற்றியைத் தடுக்க முடியாது.
ஆர்.கே.நகரில் பாஜக 500 ஓட்டுகள் கூட வாங்க முடியாது. பாஜகவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை. 4 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்வோம்," என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications