புகழேந்தி இப்படி வாய்க்கு வந்தபடி பேசுகிறாரே.. தட்டி வைக்கக் கூடாதா தினகரன்?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார்.
தினகரனின் ஆதரவாளர்களான அதிமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத், புகழேந்தி உள்பட 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். வி.பி.கலையராஜன், பாப்புலர் முத்தையா, சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரை நீக்கியுள்ளனர்.
5 பேரையும் நீக்கி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதற்கு நீக்கப்பட்ட தங்கதமிழ் செல்வன் மற்றும் புகழேந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தரக்குறைவாக விமர்சனம்
இந்நிலையில் சன்நியூஸ் தொலைக்காட்சிக்கு தினகரனின் ஆதரவாளரான புகழேந்தி தொலைபேசி வாயிலாக பேட்டியளித்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை தகாத வார்த்தைகளாலும், அவன் இவன் என்றும் மிக தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.

எட்டப்பாடி, ஜீரோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எட்டப்பாடி பழனிச்சாமி என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜீரோ பன்னீர்செல்வம் என்றும் அவர் விமர்சனம் செய்தார். எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸும் அரசியல் அநாதைகள் என்றும் புகழேந்தி கடுமையாக விமர்சித்தார்.

மக்கள் காரி உமிழ்வார்கள்
அவர்களுக்கு தன்னை நீக்க அருகதையில்லை என்றும் அவர் சாடினார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கொடுத்த தன்னை நீக்கியுள்ளவர்களை மக்கள் காரி உமிழ்வார்கள் என்றும் புகழேந்தி விளாசினார்.

நடமாடும் பிணங்கள்
தங்களை நீக்கி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற அவர், நேற்றே ஆர்கே நகரில் அவர்களின் மானம் மரியாதை போயிவிட்டது என்றும் கூறினார். எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் நடமாடும் பிணங்கள் என்றும் புகழேந்தி சாடினார்.

ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன்
எடப்பாடி பழனிச்சாமியையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் அநாதைகளாக அலையவிடும் வரை ஓயமாட்டோம் என்றும் அவர் சூளுரைத்தார். ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஜெயிலுக்கு போவது உறுதி என்ற புகழேந்தி அவர்களை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என சவால்விட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் ஒரு பச்சோந்தி
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு பச்சோந்தி என்றும் நேரத்திற்கு ஏற்றார் போல் மாறுவார் என்றும் அவர் விமர்சித்தார். ஓபிஎஸ் ஈபிஎஸ்க்கு எதிராக இன்று முதல் சுறுசுறுப்பாக அரசியலில் ஈடுபடபோகிறேன், இது சவால் என்றும் புகழேந்தி தெரிவித்தார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications