ரூ.10 ஆயிரம் என கூறி மஸ்கோத் அல்வாவை கவரில் சுற்றி கொடுத்த டிடிவி ஆட்கள்?... ஆர்கே நகர் பரிதாபங்கள்
ரூ.10 ஆயிரம் என கூறி மஸ்கோத் அல்வாவை கவரில் சுற்றி டிடிவி தினகரன் ஆட்கள் நாலு கால் பாய்ச்சலில் பறந்து சென்றதாக கூறப்படுகிறது..
Recommended Video

சென்னை: ரூ.10 ஆயிரம் என கூறி மஸ்கோத் அல்வாவை கவரில் சுற்றி ரூ.20 டோக்கனை பெற்றுக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் டிடிவி தினகரன் ஆட்கள் பறந்ததால் ஆர்கே நகர் மக்கள் ஏமாற்றம் அடைந்ததாக கூறுகின்றனர்.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, தினகரன் அணி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் போட்டியிட்டனர்.
கடந்த முறையை போல் இந்த முறையும் பணப்பட்டுவாடா புகார்கள் வந்தன. இதையும் மீறி குறித்த நேரத்தில் தேர்தல் நடைபெற்றது.

தினகரன் மீது புகார்
தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்னர், டிடிவி தினகரன் ஆட்கள் ஆர்கே நகரில் உள்ள அனைத்து வீடுகளிலும் ரூ. 20 நோட்டை கொடுத்து டிடிவிக்கு வாக்களித்துவிட்டு அந்த நோட்டில் உள்ள சீரியல் எண்ணை செல்போன் மூலம் தெரிவித்தால் ரூ.10,000 வழங்கப்படும் என ஹவாலா முறையில் பணம் விநியோகம் செய்வதாக பாஜக வேட்பாளர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதையடுத்து ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அமோகமாக வெற்றி பெற்றார். எனினும் ஒரு வாரம் ஆகியும் தங்களுக்கு பணம் கொடுக்காமல் டிடிவி தினகரன் தரப்பு ஏமாற்றிவிட்டதாக புகார்கள் எழுந்தன.

செல்போன் மூலம் அழைப்பு
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட மீனாம்பாள், நேதாஜி நகர், எழில் நகர் பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களை நேற்று முன் தினம் செல்போன் மூலம் டிடிவி தினகரன் ஆட்கள் தொடர்பு கொண்டு ரூ.20 நோட்டை கொடுத்துவிட்டு உரிய பணத்தை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறினராம். இதை நம்பி ஏராளமானோர் அந்த மர்ம கும்பல் குறிப்பிட்டிருந்த கொடுங்கையூர் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு ஒரு காரில் 3 பேர் அமர்ந்திருந்து இருந்தனர்.

வீட்டில் போய் பாருங்கள்
அப்போது அவர்கள் வாக்காளர்களிடம் ரூ. 20 டோக்கனை பெற்றுக் கொண்டு ஒரு பண்டலை அவர்களிடம் கொடுத்துள்ளனர். மேலும் இங்கு வைத்து கவரை பிரித்தால் போலீஸுக்கு தெரிந்து பிரச்சினையாகிவிடும், வீட்டுக்கு சென்று பிரியுங்கள் என்றனராம். இதை நம்பி ஆசைஆசையாய் வீட்டுக்கு போய் அந்த பண்டலை பிரித்து பார்த்தனர்.

அல்வா கொடுத்த டிடிவி ஆட்கள்
அப்போது ஒரு பேப்பருக்குள் மஸ்கோத் அல்வா சுற்றப்பட்டிருந்ததால் ஏமாற்றமடைந்ததாக வாக்காளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இது குறித்து போலீஸிடமும் தெரிவிக்க முடியாததால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மக்கள் பரிதவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications