தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவை.. தினகரன் கொந்தளிப்பு
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என தினகரன் பேட்டி அளித்து இருக்கிறார்.
ஈரோடு: தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என தினகரன் பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் சின்னத்தை பெறுவதற்காக விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு தினகரன் பேட்டி அளித்தார். அவர் அதில் தேர்தல் ஆணையத்தை மிகவும் கடுமையாக சாடி பேசி இருக்கிறார். தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

அவர் தனது பேட்டியில் ''ஓபிஎஸ் 12 எம்எல்ஏகளுடன் சென்று மனு கொடுத்த போதே அதை முடக்கி இருக்க கூடாது. அப்போது அப்படி செய்த தேர்தல் ஆணையம் ஏழு மாதங்களுக்கு பின் இப்படி தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பில் எந்த விதமான நியாயமும் இல்லை'' என்று கூறியிருக்கிறார்.
மேலும் ''இதுகுறித்து விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம். நீதிமன்றம் மூலம் மீண்டும் நாங்கள் சின்னத்தை திரும்ப பெறுவோம்.'' என்றார். மேலும் கட்சி இன்னுமும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறியுள்ளார்.
அதேபோல் ''நாங்கள் சின்னத்தை மட்டும் கைப்பற்றப் போவதில்லை, ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியையும் கைப்பற்றுவோம். ஆட்சி அதிகாரமும் விரைவில் எங்கள் கைவசம் வரும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications