தமிழக அரசுக்கே டெங்கு வந்த பிறகு எப்படி சரி செய்வாங்க? இது தினகரன் அட்டாக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக அரசுக்கே டெங்கு வந்துவிட்ட பிறகு அரசு எப்படி டெங்குவை சரிசெய்யும் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் டெங்குவை கட்டுப்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துமாறு அரசை எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் டெங்குவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது : அதிவேகத்துடன் பரவி விலைமதிப்பில்லாத மனித உயிரை காவுவாங்கும் டெங்கு என்னும் கொடிய நோயை கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் செயல்பட வேண்டிய தருணம் இது. ஜெயலலிதாவால் மக்கள் நல்வாழ்விலும், சுகாதாரத்திலும் என்றும் முதன்மையாக நின்ற தமிழகத்தில் டெங்கு பரவி படர்ந்து தொடர்ந்து மக்கள் உயிர்களை பலிவாங்குகிறது.

அரசை நம்பி பிரயோஜனம் இல்லை

கட்டுப்படுத்த முடியாத வகையில் டெங்கு நோய் அனைத்து மாவட்டங்களிலும் பரவி விட்ட பின்பு நோயின் வீரியத்தால் ஆயிரக்கணக்கான மரணங்கள் ஏற்பட்டுவிட்ட நிலையில் இனி அரசை நம்பி பிரயோஜனமும் இல்லை. அரசுக்கே டெங்கு நோய் வந்துவிட்ட பின்னால், அந்த அரசு எப்படி டெங்கு நோயில் இருந்து நம்மை காக்கும்.

டெங்கு ஒழிப்பு பணியாற்றுவோம்

எந்த தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக ஜெயலலிதா உழைத்தாரோ அந்த நோக்கத்தை அவரின் பிள்ளைகளாகிய நாம் நிறைவேற்றிட வேண்டும். டெங்கு ஒழிப்பை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும். மக்களை காவு வாங்குகின்ற இந்த கொடிய டெங்கு நோய் மேலும் பரவாமல் தடுக்கின்ற பெரும் முயற்சியில் நாம் பணியாற்றிட வேண்டும்.

 விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யுங்கள்

விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யுங்கள்

கிராமம், நகரம், வீதி, பட்டி, தொட்டி என்று அனைத்து இடங்களிலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் நீர் தேங்காமல் சுகாதாரமாக சுற்றுப்புறத்தை வைத்துக் கள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் நோயின் அறிகுறிகளையும் பட்டியலிட்டும், துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கிட வேண்டும். மேலும் நோயினை தடுக்கும் வகையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்களை மாவட்ட, நகர, பகுதி, ஒன்றிய மற்றும் கிளை கழகங்கள் தோறும் நடத்திட வேண்டும்.

 டெங்குவிற்கு முற்றுப்புள்ளி

டெங்குவிற்கு முற்றுப்புள்ளி

நோயை கட்டுப்படுத்த வேண்டிய சுகாதாரத்துறையும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி தூய்மையாக சுற்றுப்புறத்தை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய உள்ளாட்சித் துறையும் செயல்படவில்லை. இவற்றையெல்லாம் கண்காணிக்க வேண்டிய அரசும் முற்றிலுமாக செயல்படாமலும் கவலை கொள்ளாமலும் இருக்கும் இந்த நிலையில் அதிமுகவின் தொண்டர்களாகிய நாம் பொதுமக்களை காக்கும் புனித பணியில் முழுமையாக ஈடுபட்டு டெங்கு நோய்க்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran says in a statement taht no use of Government to control Dengue and also urges cadres to create awareness against dengue among people in the state.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற