ஃபெரா வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த டிடிவி தினகரன்!
மார்ச் 22ஆம் தேதி அன்று (இன்று) வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறும் என்று பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கூறினார். அன்றைய தினமும் டி.டி.வி.தினகரன் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.
சென்னை: ஜெ.ஜெ. டி.வி. என்ற பெயரில் செயல்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒளிபரப்பு கருவிகள் வாங்கியதில் அன்னிய செலாவணி முறைகேடு நடந்ததாக அமலாக்கப் பிரிவு சார்பில் டி.டி.வி.தினகரன் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது.
'பரணி பீச் ரிசார்ட்' என்ற நிறுவனத்தின் பெயரில் மயிலாப்பூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.3 கோடி கடன் பெறப்பட்டது. இந்த கடன்தொகையில் ரூ.2.5 கோடி கோடநாடு எஸ்டேட் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அன்னிய செலாவணி மோசடி வங்கியில் கடன்பெற்ற ரூ.3 கோடியும் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் டாலர் நோட்டுகள் மூலம் திருப்பி செலுத்தப்பட்டது. இதிலும் அன்னிய செலாவணி மோசடி நடந்ததாக டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கப் பிரிவு இன்னொரு வழக்கும் தொடர்ந்தது.

இந்த இரண்டு வழக்குகளும் எழும்பூர் 2-வது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்பீல் வழக்கு இதை எதிர்த்து அமலாக்கப் பிரிவு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் டி.டி.வி.தினகரன் மீதான இரண்டு அன்னிய செலாவணி மோசடி வழக்குகளையும் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று எழும்பூர் 2-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிற இந்த வழக்குகள் மீண்டும் எழும்பூர் 2-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மலர்மதி முன்னிலையில் கடந்த 17 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜரானார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மலர்மதி உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்க முடியாது என்றும், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார். அதன்படி மார்ச் 22ஆம் தேதி அன்று (இன்று) வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறும் என்று நீதிபதி கூறினார். அன்றைய தினமும் டி.டி.வி.தினகரன் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து இன்று நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கும் என்ற பரபரப்பு அதிமுக வட்டாரத்தில் நிலவியது. ஆனால் டிடிவி தினகரன் இன்று ஆஜராகவில்லை. அவரால் ஆஜராக முடியாத சூழல் இருப்பதாக தினகரன் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதையேற்று, வரும் 24ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினையில் தேர்தல் ஆணையம் முன்னிலையில் வாதம் நடைபெற்றதால் டென்ஷனில் இருந்த தினகரன், கோர்ட்டுக்கு செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications