இதுவரை எம்பி பென்ஷனில் வாழ்ந்த தினகரனுக்கு இனி மாசம் ரூ.1 லட்சம் சம்பளம்!
தான் எம்பி பென்ஷனில் வாழ்ந்து வருவதாக கூறிய தினகரனுக்கு இனி மாதம்தோறும் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கப் போகிறது.
Recommended Video

சென்னை: எம்பி பென்ஷனில் வாழ்ந்து வருவதாக கூறிய தினகரன் இனி மாதம்தோறும் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற போகிறார்.
பெரும் சர்ச்சைகளுக்கு நடுவே கடந்த வியாழக்கிழமை ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு காலை முதலே அரசியல் கட்சியினர் ராணி மேரி கல்லூரிக்கு முன்பு திரண்டிருந்தனர். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

டிடிவி தினகரன் வெற்றி
ஆர்கே நகரில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இதில் முதல் சுற்றிலிருந்தே டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வந்தார். தொடர்ந்து 19 சுற்றுகளிலும் முன்னிலை வகித்த அவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

டிடிவி தினகரன் வெற்றி
ஆர்கே நகரில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இதில் முதல் சுற்றிலிருந்தே டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வந்தார். தொடர்ந்து 19 சுற்றுகளிலும் முன்னிலை வகித்த அவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற குக்கர்
சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் ஆளும் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பாஜகவை முந்திய நோட்டா
நாம் தமிழர் கட்சி நான்காவது இடத்தையும் நோட்டா 5வது இடத்தையும் பெற்றது. பாஜக நோட்டாவை விடவும் மிகக்குறைந்த வாக்குகளை பெற்றுள்ளது.

சசிகலா குடும்பத்தின்..
பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள டிடிவி தினகரன் ஆர்கே நகர் எம்எல்ஏவாகிறார். மேலும் சசிகலா குடும்பத்தின் முதல் எம்எல்ஏ என்ற பெருமையையும் டிடிவி தினகரன் பெறுகிறார்.

இனிமே ரூ.1 லட்சம் சம்பளம்
அண்மையில் சசிகலா உறவினர்களின் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தான் எம்பி பென்ஷனில் வாழ்ந்து வருவதாக கூறினார். தற்போது ஆர்கே நகர் எம்எல்ஏவாகியுள்ள டிடிவி தினகரனுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications