நாங்களும் சொல்லுவோம்ல... முதல்வரை தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்ன தினகரன்!
முதல்வர் பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்ன சில நிமிடங்களில் டிடிவி. தினகரனும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை கூறியுள்ளார்.
சென்னை : நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துகளை சொன்ன சில நிமிடங்களில் அதிமுக அம்மா அணியின் துணை பொதுசெயலாளர் டிடிவி. தினகரன் வாழ்த்துகளை கூறியுள்ளார்.
நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதையொட்டி அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது :
மூலப் பொருளாகவும் ஞால முதல்வராகவும் விளங்கிக் கொண்டிருப்பவர் விநாயகர். அவரைப் போற்றி வணங்கும் புனித நாளான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
|
வினைகளை வேறறுக்கும் விநாயகன்
ஞானமே வடிவாய் விளங்கி மனிதர்க்கு நல்ல வரம் தரும் கணபதி. வெல்வினைகளின் வேறறுத்து வேதனைகளை போக்கி வேண்டும் வரம் அருள்பவன் விநாயகன். வேழ முகத்தவனைத் துதித்துத் தொடங்கும் எந்த செயலும் வெற்றியாகவே முடியும்.

வளமும் நலமும்
அப்படிப்பட்ட அருட்கடலாகிய விநாயகப் பெருமாள் அவதரித்த நாளில் எங்களும் இன்ப ஒளி பரவட்டும். இல்லாமை, கல்லாமை போன்ற இருட்டுகள் மறையட்டும். அனைவரது வாழ்வும் ஆனந்தமாய் அமைய எல்லா வளமும் நலமும் அனைவரும் அடைய வாழ்த்துகளை தெரிவிப்பதாக டிடிவி. தினகரன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

போட்டிக்கா?
முதல்வர் பழனிசாமி தமிழக மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே தினகரன் தரப்பு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சரி வாழ்த்து தான
ஆக எல்லா விஷயங்களிலும் முதல்வருக்கு போட்டியாக தினகரன் தரப்பு செயல்பட்டு வருவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. நாங்களும் சொல்லுவோம்ல என்கிற ரீதியில் தினகரன் தரப்பு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளது. சரி எப்படியோ ஒரு அரசியல் தலைவர் வாழ்த்து சொல்ல உரிமை இருக்கிறதல்லவா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications