தூத்துக்குடியில் நஷ்டஈடு வழங்காமல் டிமிக்கி: 2 அரசு பஸ்கள் ஜப்தியால் பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் இரண்டு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிரவேந்திரா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தூத்துக்குடி பகுதியில் டபிஸ்யூசி ரோட்டில் பேன்சி கடை நடத்தி வந்தார். கடந்த 2010ல் இவர் பாலகிருஷ்ணா என்பவருடன் குரும்பூர் அருகே உள்ள காரவிளை பகுதியில் பைக்கில் சென்றார்.
அப்போது எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் படுகாயம் அடைந்தார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து அவரது மனைவி யாசோதா ரூபாய் 40 லட்சம் இழப்பீடு கேட்டு தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீல் ரவீந்திரன் மூலம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இழப்பீடாக சுரேஷ்குமார் குடும்பத்திற்கு ரூ.20 லட்சத்து 80 ஆயிரத்து 860 வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் இந்த தொகையை போக்குவரத்துக் கழகம் வழங்காததால் இரண்டு பஸ்களை ஜப்தி செய்ய நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
இதையடுத்து கோர்ட் அமீனா தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பஸ்களை ஜப்தி செய்தார். இவை கோர்ட் வாளகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications