தூத்துக்குடியில் வடியாத வெள்ளம் - தடுமாறும் மாணவர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை விட்டு 2 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் மழை வெள்ள நீர் வடியாமல் இருப்பதால் பொதுமக்கள், மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை கொட்டி தீர்ந்தது. இதனால் குளங்கள் உடைந்து பல கிராமங்களை கடுமையான வெள்ளம் சூழ்ந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் உள்ள 6 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் அங்குள்ள பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர்.

இந்த நிலையில் மழை ஓய்ந்து 2 மாதங்கள் கடந்த விட்ட நிலையில் வெள்ள நீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளில் இப்போதும் வெள்ள நீர் சூழ்ந்து இருக்கிறது.
இதனால் பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து விடாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் சுமார் 5 ஆயிரத்திறகும் மேற்பட்ட மாணவர்கள், தொழிலாளர்கள் இந்த வழியாகதான் சென்று வருகின்றனர். குறிப்பாக பாலம் வழியாகத்தான் சென்று வர வேண்டும். தற்போது அந்த பாலத்தில் வெள்ள நீர் ஓடி வருவதால் அவர்கள் பாலத்தை கடக்க சிரமப்பட்டு வருகின்றனர்.
தற்போது பாலத்தின் மேல் பகுதியில் கால் கீழ்பகுதி அளவு தண்ணீர் செல்வதால் மாணவர்களின் பெற்றோர் காலையும், மாலையும் அங்கு காத்திருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து வருகின்றனர். இதை சுற்றிய நான்கு பகுதிகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அரசு இதை வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் கொதிப்பில் இருக்கின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications