அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தேர்தல்.. புறக்கணித்தது தமிழக வாழ்வுரிமைக் கட்சி
உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்ததையடுத்து 3 தொகுதிகளுக்கான தேர்தலையும் புறக்கணித்தது தமிழக வாழ்வுரிமைக் கட்சி
சென்னை; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய மத்திய பாஜக அரசைக் கண்டித்து தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதித் தேர்தலையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி புறக்கணித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் காவிரி ஆற்று நீர் உரிமையை கர்நாடகாவுக்கு காவு கொடுக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவே முடியாது என பச்சைத்துரோகம் செய்து வரும் இந்திய மத்திய பாரதிய ஜனதா அரசைக் கண்டித்து தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தமிழக வாழ்வுரிமைக் கட்சி புறக்கணிக்கிறது.

காவிரி ஆற்று நீர் உரிமை கோரியதற்காக கர்நாடகாவில் தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டன. ஆனாலும் இந்திய மத்திய அரசு அதைக் கண்டிக்கவும் இல்லை. தமிழகத்துக்கு திறந்துவிடப்பட வேண்டிய காவிரி நீரையும் திறந்துவிட எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு முடிவுகளின்படி உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தோம்.
இதன் பின்னரும் தொடர்ந்தும் தமிழகத்தின் காவிரி ஆற்று நீர் உரிமையை கர்நாடகா மறுத்து வருகிறது. இந்திய மத்திய பாஜக அரசோ உச்சகட்டமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மறுத்து வருகிறது. தமிழகத்தை வஞ்சிப்பது ஒன்றையே கொள்கையாக வைத்திருக்கிறது இந்திய மத்திய பாஜக அரசு.
இந்திய மத்திய பாஜக அரசின் இந்த துரோகத்தைக் கண்டிக்கும் வகையில் நவம்பர் 19-ந் தேதியன்று நடைபெற உள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான தேர்தலை தமிழக வாழ்வுரிமைக் கட்சி புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications