ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வேல்முருகன் பிரசாரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீரங்கம் சட்டசபை இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் இன்று பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை நிலையம் இன்று வெளியிட்ட அறிக்கை:

TVK extends support to ADMK in Srirangam by polls

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் இன்று பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்தது முதல் இதுவரை தமிழர் நலன், தமிழக வாழ்வுரிமைகள் மீட்பில் வெற்றி கண்டுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான திட்டவட்டமான தெளிவான நிலைப்பாட்டை பின்பற்றி வருகிறது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது; பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அணை கட்டுவதைத் தடுத்தது; முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் போராடி வென்றது;

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு; கச்சத்தீவை மீட்பதற்கான சட்டப் போராட்டம்; தமிழக மீனவர்கள் விடுதலைக்கான தொடர்ச்சியான போராட்டங்கள்; மேற்கு மாவட்ட விவசாய விளைநிலங்களைப் பாழாக்கும் கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை முடக்கியது ஆகிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உயிர்மூச்சான கொள்கைகளை நிறைவேற்றியது தமிழகத்தில் ஆளும் அண்ணா தி.மு.க. அரசுதான்.

அதேபோல் தமிழீழ இனப் படுகொலையை நிகழ்த்திய கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக தண்டிக்க வேண்டும்; தமிழீழ மக்களின் அரசியல் விருப்பங்களை அறிய ஐ.நா. அவையத்தின் முன்னிலையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்; தமிழினப் படுகொலையை நிகழ்த்திய இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றி அதைத் தொடர்ந்தும் கடைபிடித்து வருகிறது அண்ணா தி.மு.க. அரசு.

அத்துடன் தமிழ்நாட்டுக்குள் விளையாட்டு போட்டிகள் என்ற பெயரில் சிங்களர் எவரும் நுழைய முடியாத கடுமையான நிலைப்பாட்டை அண்ணா தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது. இலங்கைக்கு சென்ற தமிழ்நாட்டு கபடி வீரரர்களைத் திருப்பி அழைத்ததுடன் அப்படி அனுப்பி வைத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்ததும் அண்ணா தி.மு.க. அரசுதான்.

அண்மையில்கூட இலங்கையில் புதிய அரசு அமைந்த நிலையில் தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழரை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்திய- இலங்கை அரசுகள் தீவிரம்காட்டி வருகின்றன. ஆனால் இலங்கையில் தமிழீழப் பகுதியில் ராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கிறது; இயல்பு நிலைமை திரும்பவில்லை என்பது உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு மிகக் கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்தது அண்ணா தி.மு.க. அரசு. அத்துடன் டெல்லியில் இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்து அதன்படியே ஆளும் அண்ணா தி.மு.க. அரசு நடந்து கொண்டதுடன் தமிழீழப் பகுதியில் சிங்கள ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து தமது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாகவும் இருந்து வருகிறது.

இப்படி தமிழ்நாட்டுக்குரிய வாழ்வுரிமைகளை மீட்டெடுப்பதிலும் ஈழத் தமிழருக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாட்டையும் ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசாங்கம் மேற்கொண்டதால் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வளர்மதியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரிக்கிறது.

ஸ்ரீரங்கம் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் இன்று ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+