பதவி வாங்கித் தருவதாக பலாத்காரம்.. கலைந்து போன கரு! தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண் பரபர புகார்!

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ஒன்றிய செயலாளர் சசிகுமார் பலமுறை தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனால் தான் கர்ப்பமானதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

அரக்கோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் குமுதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இருந்து வருகிறார்.

TVK Functionary

கட்சி ரீதியாக இவருக்கும், அக்கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணைப் பெற்ற சசிகுமார், அவரிடம் அடிக்கடி வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி வாயிலாகப் பேசி வந்ததாகத் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மே மாதம் தனது வீட்டிற்கு வந்த சசிகுமார், தன்னை வற்புறுத்திப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், இதேபோன்று பலமுறை தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனால் தான் கர்ப்பமானதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சசிகுமாரிடம் தெரிவித்த போது, அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பின்னர் தனக்குக் கருக்கலைப்பு ஏற்பட்டதாகவும் புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகக் கட்சியைச் சேர்ந்த சிலர் தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும், இதனால் அச்சமடைந்து உடனடியாகப் புகார் அளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, தற்போது அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தொலைபேசி வாயிலாக அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமாரிடம் கேட்டபோது, இது முற்றிலுமாக உண்மைக்கு புறம்பான புகார் என்றும் இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழகம் முழுவதும் இது போன்ற பொய்புகார்கள் அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+