இனி 125 நாள் இல்லை.. 150 நாள் வேலை.. 25 நாள் கூடுதல் வேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கியது தமிழக அரசு!
சென்னை: வருடத்தில் 125 நாட்கள் வேலை வழங்கப்படும் VB-G RAM-G திட்டத்தில், நலிவுற்ற குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் பணி வழங்க, ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம், பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள், தனித்து வாழும் பெண்கள், SC/ST மக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் மொத்தம் 150 நாட்கள் வரை வேலைவாய்ப்பு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MGNREGA) திட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்பட்ட விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத சட்டம் (VB G RAM G) கடந்த ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
முந்தைய 100 நாட்களுக்குப் பதிலாக, புதிய சட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 125 நாட்கள் கட்டாய வேலை உறுதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. MGNREGA திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் புதிய சட்டத்தின் கீழ் தடையின்றித் தொடரும் என்றும் மத்திய அரசு உறுதியளித்திருந்தது.
இந்நிலையில், VB-G RAM-G திட்டத்தில், நலிவுற்ற குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் பணி வழங்கப்படும் என அறிவித்த தமிழக அரசு, இந்த திட்டத்திற்கு வெற்றி 125 திட்டம் என பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
125 நாட்கள் பணிகளை நிறைவு செய்த நலிவுற்ற ஏழை எளிய குடும்பங்களுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள், தனித்து வாழும் பெண்கள், SC/ST மக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் கூடுதலாக 25 நாட்கள் சேர்த்து மொத்தம் 150 நாட்கள் வரை வேலைவாய்ப்பு பெறலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
