"ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும்”- மார்க்சிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்தியா முழுவதும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பேரணி நடத்த அனுமதி கேட்டதை, காவல்துறை பரிசீலிக்கவில்லை என ஆர்.எஸ்.எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

CPIM

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைதிப்பூங்காவான தமிழகத்தில் ஊர்வலம் நடத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது? ஒரு குறிப்பிட்ட இயக்கத்துக்கு எதிராக ஏன் அரசு செயல்படுகிறது? பேரணி நடத்த தடை விதிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் என்ன லக்‌ஷர்-இ-தொய்பா அமைப்பா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இது குறித்து சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆர்எஸ்எஸ் தனது வளர்ச்சிக்கு வன்முறையை ஒரு வழிமுறையாக வைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வன்முறைகளுக்குப் பிறகே அது காலூன்றியது.

ஆர்எஸ்எஸின் நடவடிக்கைகள் அது சிற்சில நேரங்களில் செய்யும் பேரிடர் நிவாரண உதவிகள் அல்லது அவற்றை செய்தது போன்று சித்தரிக்கப்பட்ட பொய்கள் ஆகியவற்றை ஆயுதமாகக் கொண்டு தன்னை ஒரு அரசியல் சார்பற்ற அமைப்பு போல காட்டிக் கொள்ள முனைகிறது.

குடிமக்கள் அமைப்பு என்று வரையறுத்து அவர்களின் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்குவது வன்முறைக்கான வித்துக்களை தூவுவதே ஆகும். எந்தவொரு அமைப்பும் குறிப்பிட்ட பேரணிக்கு அனுமதி கோரினால் அதன் மீது நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். ஆனால், ஆர்எஸ்எஸ்க்கு அனுமதியளித்து தீர்ப்பளித்த நீதிமன்றம் இனிமேல் ஆர்எஸ்எஸ் அனுமதி பெற நீதிமன்றத்தை நாடவிடாதீர்கள் என்பது சூழ்நிலைகளைப் பற்றி கவலைப்படாமல் அனுமதியளிக்க வேண்டுமென்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஆர்எஸ்எஸ்-ஆல் கடந்த காலங்களில் நடைபெற்ற வன்முறைகளைப் பற்றி கவலையின்றி நீதிமன்றம் இப்படி தீர்ப்பு சொல்லியிருப்பது கவலையளிக்கிறது.

எனவே, ஆர்எஸ்எஸ் பேரணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்று கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றும், உரிய முறையில் வழக்கை நடத்த வேண்டுமென்றும், அமைதிப் பூங்காவாக திகழும் தமிழ்நாட்டை காப்பதற்கு இது அவசியம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+