ஸ்ரீபெரும்புதூரில் 8 வயது ஜார்க்கண்ட் சிறுமி மாயம்! தாத்தா, பாட்டியுடன் இருந்த போது காணவில்லை!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநில தம்பதியின் மகளை காணாததால் போலீஸார் தேடி வருகிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அருகே கருமாங்கழனி கிராமத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

sriperumbudhur

இவருக்கு 8 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கல்பனா தனது சொந்த மாநிலமான ஜார்க்கண்டிற்கு சென்றுள்ளார். இதனால் சிறுமி தனது தாத்தா, பாட்டியுடன் வீட்டில் இருந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சிறுமி வீட்டிலிருந்து தேசிய நெடுஞ்சாலை அருகே
நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் சிறுமி வீடு திரும்பாததால், தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

தற்போது வரை சிறுமி கிடைக்காததால் திருப்பெரும்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயமான சம்பவம் திருப்பெரும்புதூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருப்பதற்காக இருப்பதற்காக சிங்கப்பெண் படை உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஜீப்பில் ஆங்காங்கே வலம் வந்து பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம் நடைபெறாமல் பார்த்துக் கொள்வர்.

ஆனால் அண்மைக்காலமாக கொலை, கொள்ளை, வழிபறி உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் சிறுமிகள் மாயமாகி, அவர்களை தேடினாலும் கிடைக்காத நிலை உள்ளது. அது போல் சிறுவர்களும் காணாமல் போகிறார்கள். இல்லாவிட்டால் பகிரங்கமாக கடத்தப்படுகிறார்கள். அவ்வாறு கடத்தப்படும் சிறுவர்கள் எங்காவது வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்களா என தெரியவில்லை.

அது போல் பெண் குழந்தைகளையும் கடத்திச் சென்று சமூகவிரோத செயல்களில் அவர்களை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்த வைக்கும் போக்கும் அதிகரித்துள்ளது. தவெக அரசு பொறுப்பேற்றது முதல் கொலைகள், காவல் மரணங்கள் என நூற்றுக்கணக்கானவை என சொல்லப்படுகிறது. அது போல் போதை பொருளான மெத்தபெட்டமைன் கடத்தல்களும் அதிகம் நடைபெறுகின்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவிக்கிறார்கள். இவற்றை முதல்வர் விஜய் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+