என்எல்சி முற்றுகை போராட்டம்.. வேல்முருகனை தேசத்துரோக வழக்கில் கைது செய்தது நெய்வேலி போலீஸ்
என்எல்சி முற்றுகை போராட்டம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை நெய்வேலி போலீஸார் தேச துரோக வழக்கில் கைது செய்துள்ளனர்.
Recommended Video

சென்னை: என்எல்சி முற்றுகை போராட்டம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை நெய்வேலி போலீஸார் தேச துரோக வழக்கில் கைது செய்துள்ளனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடந்த வாரம் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்றார். விமானநிலையத்தில் அவரை தடுத்து நிறுத்திய போலீசார் திருப்பி அனுப்பினர்.

புழல் சிறையில் அடைப்பு
ஆனால், விக்கிரவாண்டியில் டோல்கேட் தாக்கப்பட்ட வழக்கில், வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதி
அப்போது தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்து, சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போலீசார் குவிப்பு
இந்நிலையில் என்எல்சி போராட்டம் தொடர்பாக வேல்முருகன் மீது நெய்வேலி போலீசார் நேற்று தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

போலீசார் கைது
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்து வேல்முருகனை தேசதுரோக வழக்கில் நெய்வேலி போலீசார் கைது செய்துள்ளனர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள வேல்முருகனை சிகிச்சை பெறவிடாமல் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

புழல் சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட வேல்முருகன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள வேல்முருகன் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications