நீட் தேர்வு சென்னை சிபிஎஸ்இ அலுவலகத்தில் வேல்முருகன் நடத்திய 3 மணி நேர உள்ளிருப்பு போராட்டம் நிறைவு
சென்னை அண்ணாநகரில் உள்ள சி.பி.எஸ்.இ. அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் 3 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
Recommended Video

சென்னை: அண்ணாநகரில் உள்ள சி.பி.எஸ்.இ. அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் 3 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து 3 மணி நேரத்திற்கு பின் வேல்முருகன் போராட்டத்தை கைவிட்டார்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் போதுமான தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை.

இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்னை அண்ணாநகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேல்முருகன் தென்மண்டல சிபிஎஸ்இ இயக்குநரிடம் மனு அளித்தார்.
மேலும் வெளி மாநிலங்களில் தேர்வு எழுதும் மாணவர்களை விமானம் மூலம் அழைத்து செல்ல சிபிஎஸ்இ நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்தார்.
நீட் தேர்வு மையத்தை தமிழகத்திலேயே அமைக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். வேல்முருகன் 3 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சிபிஎஸ்இ அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
3 மணி நேரத்திற்கு பின் போலீசாரின் கோரிக்கையை ஏற்ற வேல்முருகன் போராட்டத்தை கைவிட்டார். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications