சிறுவாணி: கேரளா எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்திய வேல்முருகன் உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் கைது
சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரளாவைக் கண்டித்து இன்று பொள்ளாச்சி அருகே எல்லையில் முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதற்கான சுற்றுச் சூழல் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.

தொடர் போராட்டங்கள்
கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வேல்முருகன் போராட்டம்
இதனிடையே பொள்ளாச்சி அருகே கேரளா எல்லையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று கேரளா வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார்.

கைது
ஆனால் போலீசார் எல்லையிலேயே அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 1000க்கும் மேற்பட்டோர் எல்லையில் திரண்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஏழு தமிழர் விடுதலை இயக்கம்
முன்னதாக பொள்ளாச்சியில் நடைபெற்ற ஏழு தமிழர் விடுதலைக்கான ஏழு லட்சம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தொடங்கி வைத்தார் வேல்முருகன். மாணவர் இயக்கங்கள் இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications