தகவல் தொழில்நுட்பத்தின் பலன்.. சென்னை மக்களை ஒருங்கிணைத்து பேருதவி செய்த டிவிட்டர்!
சென்னை: வெள்ளத்தால் தவித்த மக்களையும், உதவி தேவைப்படும் மக்களையும் ஒருங்கிணைப்பதில் டிவிட்டர் பெரும்பங்காற்றி வருகிறது.
சென்னையில் நேற்று காலை முதல் பெய்ய தொடங்கிய மழை, இரவுவரை தொடர்ந்து கொட்டித் தீர்த்தது. இதை எதிர்பாராத மக்கள், ஆங்காங்கு வெள்ளத்தின் நடுவே சிக்கினர். சிலர் வீடுகளுக்குள்ளேயே சிக்கினர். முட்டி அளவுக்கு தண்ணீரில், அவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
கீழ்கட்டளை பகுதியில் உள்ளவர்கள் இலவச மருத்துவ உதவிக்கு அணுகவும்
Dr Aravind Kumar 8124050770
#ChennaiRainsHelp
— சாரே (@Prabinraj1) December 2, 2015 மாநகராட்சி மற்றும் மீட்பு குழுவினருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டும் உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கவில்லை. எனவே, அவர்கள் டிவிட்டரை தங்கள் உயிர்காக்கும் ஆயுதமாக கையில் எடுத்தனர்.
@RJ_Balaji https://t.co/YsMnhlnpuE
— Theriiiii (@mdbilal10) December 2, 2015 தங்களது ஏரியா, தொலைபேசி எண்களுடன் டிவிட்டரில் #chennairains என்ற ஹேஷ்டேக்குடன், அவர்கள் கோரிக்கையை தெரிவித்தனர். நள்ளிரவு வரை விழித்திருந்து பல டிவிட்டர் பயனாளிகள் இதை ஷேர் செய்து (ரீட்விட்) தகவலை பல மக்களுக்கு கொண்டு சேர்த்தனர்.
5000 உணவு பொட்டலங்கள் தயார்நிலையில் உள்ளன. தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்
#ChennaiRainsHelp
Vineet Jain 9840426263
Gaurav Jain 9841062626
— Gokila புலி Honey (@gokila_honey) December 1, 2015 பெரும்பாலும் கர்ப்பிணி பெண்கள் இருக்கும் வீடுகளில் இருந்தே உதவிகள் கேட்கப்பட்டன. முதியவர்கள் இருப்பதாகவும், பல டிவிட்டுகள் போடப்பட்டன. இன்னும் சிலர் தங்குமிடங்கள் இருப்பதாகவும், வருவோர் வரலாம் என்றும் டிவிட் செய்தனர். அதை பலர் ரீடிவிட் செய்தனர்.
Urgent : need oxygen cylinder https://t.co/glaIW8fezB
— சுபாஷ் (@su_boss2) December 1, 2015 உதாரணத்துக்கு, ஜிஎஸ்டி சாலையில் தவிப்போர் எஸ்ஆர்எம் வளாகத்தில் தங்கலாம் என்று வெளியான டிவிட் பல ஆயிரம் பேரை சென்று சேர்ந்தது. சில மணி நேரங்களிலேயே, இடம் முழுமையடைந்துவிட்டது என்ற மறுதகவல் வெளியானது. அந்த அளவுக்கு தேவைப்படும் மக்களுக்கு #chennairains ஹேஷ்டேக் உதவியது.
தற்போது டிவிட்டர் கணக்கு வைத்திருப்போர் மட்டுமின்றி, கூகுளில் தேடுவோருக்கும் டிவிட்டுகள் காணக்கிடைக்கிறது. எனவே #chennairains என்று கூகுளில் தேடியவர்களுக்கும் பலன் கிடைத்தது.
சிலர் யாருக்காவது செல்போன் ரீசார்ஜ் செய்ய முடியாவிட்டால் பேடிஎம் மூலமாக ரீசார்ஜ் செய்துவிடுகிறேன் என்று கூட உதவிக்கரம் நீட்டியதை டிவிட்டரில்பா்க்க முடிந்தது.
Breakfast and lunch being organised at T- nagar Jain temple,G N chetty road 5000packets being prepared kindly contact #chennairains
— ஆழ்வார்க்கடியான் (@Green_Tamil) December 1, 2015 ஒருவகையில் பலரது உயிர்காக்கும் கருவியாக நேற்று முதல் டிவிட்டர் விளங்கிவருகிறது. இன்று ஹேஷ்டேக் மாற்றி டிரெண்ட் ஆகிக்கொண்டுள்ளது. #ChennaiFloods என்ற ஹேஷ்டேக் போட்டு தேடினால் உதவிகள் பற்றிய தகவல்கள் உங்களுக்கும் கிடைக்கலாம். இந்தியாவுக்கான டிவிட்டர் நிறுவனத்தின் கணக்கு #chennairainshelp என்ற பெயரில், ஹேஷ்டேக் செய்தால் உதவிகளை ஒருங்கிணைப்பதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications