சிவகங்கை: இரட்டைக் கொலை மானாமதுரை கோர்ட்டில் 4 பேர் சரண்
மானாமதுரை: சிவகங்கை இரட்டைக் கொலை தொடர்பாக மானாமதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தந்தை, மகன் உட்பட நான்கு பேர் சரணடைந்தனர்.
சிவகங்கை அருகே பனங்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா, வெங்கடேஸ்வரன். இவருவரையும் கடந்த 18ம் தேதி நள்ளிரவு மோட்டார் பம்ப் செட் ரூமில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. மறுநாள் காலை மோட்டார் ரூமில் பார்த்த போது ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். தேர்தல் முன்விரோதம் தொடர்பாக இக்கொலை நடைபெற்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் இன்று பகல் 11 மணிக்கு மானாமதுரை ஜேஎம் கோர்ட்டில் செந்தில், அவரது தந்தை முத்தையா, சுப்ரமணியன் மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய நால்வரும் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் பின் சம்பந்தபட்ட நிதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
செந்தில் தரப்பினருக்கும் வெங்கடேஸ்வரன் தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் இருந்து வந்துள்ளது. இருதரப்பினரும் பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் புகார் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து கொலை சம்பவம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. பனங்காடியில் கொலை நடந்த போது சம்பவ இடத்தை பார்வையிட வந்து எஸ்பி அஸ்வின் கோட்னீசிடம் கிராமமக்கள் இது தொடர்பாக புகார் செய்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications