அடுத்தடுத்து அரிவாள் வெட்டு, கத்திக் குத்து... தென்காசியை அச்சுறுத்திய அண்ணன் தம்பி
தென்காசி: தென்காசி அருகே ஒரு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர், கடன் கொடுத்தவர், பைக்கில் வந்தவர் என 3 பேரை கொல்ல முயன்று அரிவாளால் வெட்டியும் கத்தியால் குத்தியும் படுகாயப்படுத்திய அண்ணன், தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அச்சன்புதூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சங்கு பாண்டியன் இவர் கடந்த 09.11.2015 அன்று மேக்கரை கிராமத்திற்கு ஒரு புகார் தொடர்பாக விசாரணைக்கு சென்றபோது நபிஷா பீவி என்பவரது மகன்கள் ஜாகிர் உசேன்,சதாம் உசேன் ஆகியோர் சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கு பாண்டியனை கத்தி,மற்றும் அரிவாளால் தலையிலும், முதுகிலும் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

அவரை வெட்டிய இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.இந்நிலையில் ஜாகிர் உசேன்,சதாம் உசேன் ஆகியோர் மத்தாளம் பாறை என்ற ஊரை சார்ந்த சிவனுப்பாண்டியன் என்பரிடம் ரூபாய் 10ஆயிரத்தை கடனாக வாங்கியுள்ளனர். நேற்று காலை சிவனுப் பாண்டியன் தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகே வைத்து ஜாகிர் உசேன்,சதாம் உசேன்ஆகியோரை சந்தித்து கொடுத்த கடனை திருப்பி கேட்டபோது அண்ணன் தம்பி இருவரும் சிவனுப் பாண்டியனை அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளனர்.
அவர் உயிர்தப்பி தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இலத்தூர் காவல் நிலைய எல்கைக் குட்பட்ட பகுதியில் மேக்கரையை சார்ந்த முகமத்அனீஸ் என்பவர் இருசக்கர வானகத்தில் வரும் போது அவரை கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.
மூன்று வழக்கிலும் தொடர்புடைய இவர்கள் தென்காசி பகுதியில் அரிவாளோடு மறைந்திருப்பதாக தென்காசி போலீசாருக்கு தகவல் கிடைக்கவே இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமயில் போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications