தென்காசி அருகே லாரி கவிழ்ந்து 2 பேர் பலி
தென்காசி: தென்காசி அருகே நடந்த லாரி விபத்தில் 2 கூலித் தொழிலாளர்கள் பலியானார்கள்.
உத்திரப்பிரதேசமாநிலத்தை சார்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தமிழகத்தில் கூலித் தொழிலாளிகளாக பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.நாமக்கல்லை சார்ந்த போர்வெல் கம்பனிகளில்1000க்கும் மேற் பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த போர்வெல் லாரிகள் அடிப்படையில் செல்லும் போது இந்த தொழிலாளர்களும் அப்படியே செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கேரளா மாநிலத்திலிருந்து அதிகாலை நாமக்கல்லை நோக்கி இரண்டு போர்வெல் லாரிகள் தென்காசி அருகேயுள்ள சிவராம பேட்டை அருகே சென்று கொண்டிருந்தன.அதில் 10 உத்திரப்பிரதேச மாநில தொழிலாளர்கள் படுத்திருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக லாரி வளைவில் உள்ள பாலத்தில் கவிழ்ந்தது.இதில் லாரியில் படுத்திருந்த தொழிலாளர்கள் முகேஷ்,பரமேஸ்வரன்,ஆகிய இரண்டுபேர் போர்வெல் பைப்கள் சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
லாரியில் பயணித்த மேலும் 8 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.இதுகுறித்து அறிந்த காவல் துறையினர் விரைந்து சென்று காயம் பட்டவர்களை தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இறந்தவர்கள் உடலைக் கைப்பற்றி இது குறித்து ஆயக்குடி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications