சென்னையில் பயங்கரம்.. செல்போன் சார்ஜ் போட்டபோது ஏற்பட்ட தீ விபத்து.. தந்தை மகள் உடல் கருகி பலி!
சென்னையில் செல்போனுக்கு சார்ஜ் போட்டபோது ஏற்பட்ட தீயில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: செல்போனுக்கு சார்ஜ் போட்டபோது ஏற்பட்ட தீயில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் அரங்கநாதபுரம் காதர்பாய் தெருவில் வசித்து வருபவர் 90 வயது முதியவரான ஹபிக் முகமது. இவரது மகள் மகரூர்சா.
இவர் நேற்றிரவு தனது செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.அப்போது திடீரென செல்போனில் தீப்பற்றியது.

மண்ணெண்ணெய் கேன்
செல்போனில் பற்றிய தீ அருகில் இருந்த மண்ணெண்ணெய் கேனுக்கும் பரவியது. இதனால் அருகில் படுத்திருந்த மகரூர்சா படுகாயம் அடைந்தார்.

காப்பாற்ற முயன்ற தந்தை
இதனால் அலறி துடித்தார் மகரூர்சா. இதனைக்கண்ட தந்தை ஹபிக் முகமது அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் தீயில் சிக்கினார்.

இருவரும் பலி
இதில் ஹபிக் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். தீயில் படுகாயம் அடைந்த மகரூர்சா தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதிர்ச்சி சம்பவம்
இந்த விபத்து குறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் ஏற்பட்ட தீ 2 உயிர்களை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications