மத்திய அரசு உதவியால் இரட்டை இலை சின்னம் கிடைத்ததா? முதல்வர் சொன்ன அந்த பதில்
Recommended Video

சென்னை: இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு கிடைக்க பாஜகவுடன் இணக்கமாக உள்ளதுதான் காரணமா என்ற நிருபர்களின் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார்.
தேர்தல் ஆணையத்திடமிருந்து இரட்டை இலை குறித்து உரிய அறிவிப்பு வெளியாகும் முன்பே, பிரஸ் மீட்டில், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைத்துள்ளதாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
அப்போது மிகுந்த மகிழ்ச்சியாக காணப்பட்டார் முதல்வர்.

நிருபர்கள் கேள்வி
முதல்வரிடம், பாஜகவிடம் உங்கள் அணியினர் இணக்கமாக இருப்பதால், இந்த சின்னம் பிரச்சினையில் உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதாக பார்க்கிறீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசு பின்னணியில் இல்லை
அப்போது பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இரட்டை இலை சின்னம் கிடைத்ததன் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக நீங்கள் கூறுவது தவறான கருத்து. தேர்தல் கமிஷனிடம் வழக்கு நடைபெற்றது. தேர்தல் கமிஷன் கேட்ட தகுந்த விளக்கங்களை அளித்தோம். தேவைப்படும் ஆதாரங்களை ஒப்படைத்த காரணத்தால்தான் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

காரணம் இதுதான்
90 சதவீத நிர்வாகிகள் எங்கள் பக்கம் இருந்தனர். எம்.பி, எம்எல்ஏக்கள் எல்லோரும் எங்கள் பக்கம் இருந்தனர். எனவேதான் தீர்ப்பு எங்கள் பக்கம் வந்துள்ளது. இன்றைய தினம் தேர்தல் ஆணையம் சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. எல்லாம் வல்ல இறைவன் ஆசியோடு நியாயத்தின் பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளது.

ஆவணங்கள் சமர்ப்பிப்பு
தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. எங்கள் தரப்பிலிருந்து ஏகப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்தோம். தீவிர விசாரணைக்கு பிறகே தீர்ப்பு வெளியாகியுள்ளது என்றார்.

மோடியால் கிடைத்தது
இதனிடையே, தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், முதல்வருக்கு மட்டும் முதலிலேயே எப்படி தீர்ப்பு விவரம் தெரியவந்தது? இரட்டை இலை சின்னம் மோடியால் திரும்ப கிடைக்கும் என்று அமைச்சர் ஒருவர் ஏற்கனவே கூறியிருந்தார். அவர்களுக்கு சின்னம் கிடைத்தால் அது உண்மையாகியுள்ளது என்பதே அர்த்தம் என்றார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications