தூத்துக்குடி காதல் தம்பதி கொலை.. நீதிமன்றத்தில் 2 பேர் சரண்.. அனைவரையும் தூக்கி போலீஸ் அதிரடி
தூத்துக்குடி : தூத்துக்குடியில் திருமணம் ஆகி மூன்று நாட்களே ஆன புதுமணத் தம்பதி கார்த்திகா - மாரிசெல்வம் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய கருப்பசாமி, பரத் ஆகிய 2 குற்றவாளிகள் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். புதுப்பெண் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் நேற்று கைதான நிலையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் தூத்துக்குடி முருகேசன் நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிசெல்வம்(24) தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலைபார்த்து வந்தார். தூத்துக்குடி திருவிக நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம். இவரது மகள் கார்த்திகா (20). கார்த்திகா டிகிரி படித்து முடித்துள்ளார்.

கார்த்திகாவும் மாரிசெல்வமும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் இதில் மாரிச்செல்வம் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். கார்த்திகா வசதியான குடும்பம். இதனால் இவர்களது காதலுக்கு கார்த்திகா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதனால், கடந்த அக்டோபர் 30-ம் தேதி கார்த்திகாவை அழைத்துக் கொண்டு கோவில்பட்டிக்கு போன மாரிசெல்வம், அங்குள்ள கிழக்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். பின்னர், கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் கோவில்பட்டியிலேயே தங்கி உள்ளார்கள்.
இந்நிலையில் திருமணம் நடந்த 3 நாட்களுக்கு பின்னரே, அதாவது நேற்று முன்தினம் காலையில் கார்த்திகா மாரிச்செல்வம் ஜோடி, தூத்துக்குடி முருகேசன் நகரில் உள்ள மாரிசெல்வத்தின் வீட்டுக்கு வந்துள்ளனர். மாரிசெல்வத்தின் பெற்றோர் அவர்களை வரவேற்று ஏற்றுக்கொண்டனர். பின்னர் மாரிச்செல்வத்தின் பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டனர். புதுமணத் தம்பதியர் இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்கள்.
நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் , மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து, மாரிசெல்வம், கார்த்திகா ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், ஏடிஎஸ்பி கார்த்திகேயன், ஊரக டிஎஸ்பி சுரேஷ், சிப்காட் காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு உடனே சென்றார்கள்.
அங்கு மாரிசெல்வம், கார்த்திகா ஆகியோரது உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்தக் கொலை வழக்கை சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் புதுப்பெண் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் ஏற்பாட்டின் பேரில் 6 பேர் கும்பல் கார்த்திகாவையும் மாரிச்செல்வத்தையும் கொலை செய்தது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
முதலில் தம்பதியை கொல்ல ஏற்பாடு செய்த பெண்ணின் தந்தை முத்துராமலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். முத்துராமலிங்கத்துடன், திருவிக நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கி ராஜா, சங்கர் காலனியைச் சேர்ந்த மாரியப்பன் ஆகியோரை தூத்துக்குடி சிப்காட் போலிசார் கைது செய்தனர். இவர்களுடன் 18 வயது நிறைவடையாத சிறார் ஒருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கருப்பசாமி, பரத் ஆகிய 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் புதுமண தம்பதியை கொன்ற வழக்கில் கருப்பசாமி, பரத் ஆகிய 2 குற்றவாளிகள் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். பெண் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் நேற்று கைதான நிலையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நேற்று மாரிசெல்வம், கார்த்திகா உடல்கள் நேற்று தூத்துக்குடி மின்மாயனத்தில் தகனம் செய்யப்பட்டது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications