ஓ.பி.எஸ்-எடப்பாடி கோஷ்டி பேச்சுவார்த்தைக்கு கூட இருந்தே குழி பறிக்கும் தினகரனின் ஸ்லீப்பர் செல்கள்!
பன்னீர் அணி, பதவிக்கு அலைவதை போல காட்ட வேண்டும் என விரும்புகிறது டிடிவி தினகரன் ஆதரவு கோஷ்டி. இதை தடுக்க முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளது எடப்பாடி கோஷ்டி. இதனால் கோபத்திலுள்ளது ஓ.பி.எஸ் கோஷ்டி. இதுதான் அ
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் நடுவேயான பேச்சுவார்த்தையில், அமைச்சர் ஜெயக்குமாரும், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் குழப்பம் ஏற்படுத்தி வருகிறார்கள்.
சில தினங்கள் முன்பே இக்குழு கூடும் நிலை ஏற்பட்டபோது, ஜெயக்குமார் திடீரென, ஓ.பன்னீர்செல்வத்தை கிண்டல் செய்து பேட்டியளித்தார். தர்ம யுத்தத்தில் முதல் கட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதாக ஓ.பி.எஸ் கூறியதை ஜெயக்குமார் கிண்டல் செய்திருந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கு கூட பன்னீர்செல்வம்தான் காரணம் என கூறிக்கொள்வார் என கேலி செய்திருந்தார் அவர்.

எடப்பாடி தரப்பு கடுப்பு
டிடிவி தினகரன் தரப்பு ஆதரவாளரான ஜெயக்குமாரும், தம்பிதுரையும்தான், பேச்சுவார்த்தையை கெடுத்துவிட தேவைப்பபடும் ஏற்பாடுகளை செய்துவருவதாக எடப்பாடி தரப்பு கடும் கடுப்பில் உள்ளதாம்.

பதவியில் ஆசை இல்லை
எங்களுக்கு பதவியில் ஆசையில்லை என்பதையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மக்களிடம் சொல்ல விரும்புகிறது. எனவேதான் சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு விலக்க வேண்டும், ஜெ. மரணத்திற்கு சிபிஐ விசாரணை தேவை என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கூறி வருகிறார் கே.பி.முனுசாமி.

சீண்டும் ஜெயக்குமார்
ஆனால் ஓ.பி.எஸ் தரப்பு பதவிக்கு ஆசைப்பட்டுதான் பேச்சு நடத்த வருகிறது என்று கூறவே ஜெயக்குமார் மற்றும் தம்பிதுரை விரும்புகிறார்கள். இதனால்தான் எடப்பாடிதான் முதல்வராக தொடருவார் என தம்பிதுரை பேட்டியில் கூறினார். ஜெயக்குமார் நேற்று அளித்த பேட்டியில், இரு அணியும் இணைய ஓ.பி.எஸ்-க்கு நிதித்துறையை வழங்க தயார் என கூறினார்.

முத்தரப்பும் 3 கொள்கை
மக்கள் மத்தியியில் பன்னீர் அணி, பதவிக்கு அலைவதை போல காட்ட வேண்டும் என விரும்புகிறது டிடிவி தினகரன் ஆதரவு கோஷ்டி. இதை தடுக்க முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளது எடப்பாடி கோஷ்டி. இதனால் கோபத்திலுள்ளது ஓ.பி.எஸ் கோஷ்டி. இதுதான் அதிமுக சிக்கலுக்கு காரணம்.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள்












Click it and Unblock the Notifications