நெல்லை: மோட்டார் அறையிலிருந்து கசிந்த மின்சாரத்தால் ஆற்றில் குளித்த இருவர் பலி
நெல்லை: நெல்லை அருகே ஆற்றில் பாய்ந்த மின்சாரத்தால் குளிக்கச் சென்ற இருவர் பரிதாபமாகப் பலியானார்கள்.
ஓட்டுநர்களான ரமேஷ் மற்றும் காமாட்சி இருவரும் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே பாப்பன்குளம் கருணை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அருகில் இருந்த குடிநீர் திட்ட உறைகிணறு மோட்டார் அறையிலிருந்து கசிந்த மின்சாரம் நீரில் பாய்ந்திருக்கிறது. இதனை அறியாமல் ஆற்றில் இறங்கிய இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள்.
ஏற்கனவே, உறை கிணறு மோட்டார் அறையிலிருந்து மின் கசிவு இருப்பது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்காததே இரு உயிர்களைப் பலி வாங்கக் காரணம் என இறந்தவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர்.
மேலும், அம்பை அரசு மருத்துவ மனை முன்பாக பலியானவர்களின் உறவினர்கள் பிணத்தை வாங்க மறுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அம்பை டி.எஸ்.பி. மணிமாறன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன் பொன்னுசாமி ஆகியோர் அளித்த வாக்குறுதிகளின் படி உறவினர்கள் சடலங்களைப் பெற்றனர்.
இருவர் பலியாகக் காரணமான அஜாக்கிரதை குற்றத்திற்காக குடிநீர்த் திட்ட பணியாளர்களான பால தண்டாயுதம், குமார் இருவரையும் கைது செய்ததோடு இசக்கி என்பவரையும் ஆழ்வார்குறிச்சி போலீசார்த் தேடி வருகின்றனர்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications