சேலத்தில் வீட்டுக்குள் பாகுபலி-2 திருட்டு டிவிடி தயாரித்தவர்கள் கைது!
சேலத்தில் பாகுபலி-2 திருட்டு டிவிடிக்கள் தயாரித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்: சேலம் மாவட்டம் எருமைப்பாளையத்தில் வீடு ஒன்றில் பாகுபலி- 2 திருட்டு டிவிடிக்கள் தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் எருமைப்பாளையத்தில் வீடு ஒன்றில் திருட்டு டிவிடி தயாரிக்கபப்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் பாகுபலி 2- டிவிடி தயாரித்த 2 பேர் சிக்கினர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கவண் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட புதுப்பட டிவிடிக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாகுபாலி-2 திரைக்கு வந்து ஒரு நாளே ஆன நிலையில்,திருட்டு டிவிடிக்கள் தயாரிக்கப்பட்டுள்ள விவகாரம் பாகுபலி குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படம் ரீலீசாவதற்கு முன்பே நெட்டில் பாகுபலி-2 முழு படமும் வெளியாகியிருந்தது.அதனைத் தடை செய்ய படக்குழு கடும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனாலும் பலனில்லாமல் போனது.












Click it and Unblock the Notifications