Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிராவயல் மஞ்சுவிரட்டில் 2 பேர், ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுமுட்டி ஒருவர் பலி!

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 2 பேரும், ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் ஒருவரும் என மூன்று பேர் மாடு முட்டி பலியாகினர்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிராவயல்மஞ்சுவிரட்டு போட்டியில் பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் மாடு புகுந்ததை தொடர்ந்து2 பேர் சம்பவ இடத்திலே பலியாயினர். இதேபோன்று மணப்பாறையிலும் ஒருவர் மாடு முட்டிபலியானார்.

பொங்கல் திருநாளுடன்இணைந்த தமிழரின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளும், மஞ்சுவிரட்டு போட்டிகளும் பல பகுதிகளில் நடைபெறுவருகின்றன. மதுரை, சிவகங்கை உள்ளிட்டபல்வேறு பகுதிகளில் போட்டிகள் நடைபெற்றன.

 Two Spectators died in Sivagangai Jallikattu

சிவகங்கை மாவட்டம்சிராவயல் பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை காண சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமானோர் அங்குகூடியிருந்தனர். அப்போது போட்டியில் கலந்துகொண்டமாடு ஒன்று திமிறி கொண்டுகூட்டத்திற்குள் நுழைந்தது.

இதனை சற்றும் எதிர்ப்பாராத பார்வையாளர்கள்சிதறி ஓடினர். இந்த சம்பவத்தின் போது மாடு திமிறிக்கொண்டுபலரை குத்திக்கிழித்தது. இதில் 2 பேர் சம்பவஇடத்திலே பலியானார்கள். மேலும் 50க்கும் மேற்பட்டோர் மாடுமுட்டியதிலும், கூட்ட நெரிசலிலும் சிக்கிபடுகாயமடைந்தனர்.

விசாரணையில், பலியானவர்கள் காரைக்குடியைச் சேர்ந்த ராமநாதன் மற்றும்செட்டியூரைச் சேர்ந்த காசி என்பதும்தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்குமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நிகழ்ச்சி நிர்வாகிகள்தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று மணப்பாறை அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டையை சேர்ந்த சோலை பாண்டியன் என்பவரை மாடு முட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+