நெல்லையில் பயங்கரம்.. பெரும் சத்தத்துடன், தொப்பென சரிந்து விழுந்த பள்ளிக்கூட சுவர்.. 4 மாணவர்கள் பலி
பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்
நெல்லை: நெல்லையில் தனியார் பள்ளிக்கூட கட்டிட சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும் 2 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
நெல்லையில் பொருட்காட்சி திடல் அருகே சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இன்று காலை வழக்கம்போல் பள்ளி இயங்கி வந்துள்ளது.. 11 மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது..
மாணவர்கள் கழிவறைக்குள் சென்றுள்ளனர்.. அப்போதுதான், சுவர் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.. இதனால் மாணவர்கள் அலறி அடித்து தப்பி ஓட முயன்றனர்..

இடிபாடுகள்
எனினும், கட்டிடம் அப்படியே சரிந்து விழுந்துள்ளது.. இதில் பல மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதனால் பள்ளி நிர்வாகம் உடனடியாக போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தந்தது.. அவர்கள் விரைந்து இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

2 மாணவர்கள்
எனினும், இதில் 8 ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் சஞ்சய், விஷ்வ ரங்சன் ஆகிய 2 மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் 3 மாணவர்கள் இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.. மேலும் இந்த இடிபாடுகளில் மாணவர்கள் பலர் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. இதில் 4 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது..

சிகிச்சை
காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அத்துடன் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி சுற்று சுவர் எதனால் இடிந்து விழுந்தது என்று தெரியவில்லை. சமீப நாட்களாகவே மழை பெய்து வருவதால், அதன்காரணமாக இடிந்து விழுந்திருக்கலாம் என்கிறார்கள்..

அதிர்ச்சி
எனினும் இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.. இந்த திடீர் விபத்து காரணமாக, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பரபரப்பும் அதிர்ச்சியும் சோகமும் தொற்றி கொண்டுள்ளது. அத்துடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.

மேலும் ஒருவர் பலி
2 மாணவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், மேலும் 2 மாணவர்கள் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்... மேலும் 2 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர். சுவர் இடிந்து விழுந்ததுமே பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்தில் இருந்து அனைவரும் சிதறி ஓடியுள்ளனர்... அதனால், அனைத்து மாணவர்களையும் வகுப்பறைக்கு வர சொல்லி யார் இல்லை என்பது குறித்து கணக்கெடுக்க கூடிய பணியை பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாரிகள்
நெல்லை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்... 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இடைவேளை விடப்பட்டதாக சொல்லப்படுகிறது... சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சம்பவ இடத்தில் அப்போது இருந்துள்ளனர். சுவர் இடிந்து விழுந்ததுமே 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்... இப்போது, 8 மற்றும் 9ஆம் வகுப்பு தவிர அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவித்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் பணியில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது..

போராட்டம்
4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெற்றோர்கள், சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியும், சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர்... இந்த சம்பவத்தால் நெல்லை டவுன் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது... போராட்டம் செய்து வரும் மாணவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழிசை
இதனிடையே, மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.. உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதாகவும், மேலும் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுவதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications